ஆப்பிள் பயனர்களை குறிவைக்கும் பெகாசஸ் ஸ்பைவேர் – உலகின் டாப் 5 நிகழ்வுகள்

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

  1. கிறிஸ்துமஸ் பேரணி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – சிறுவன் பலி

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் வாவ்கேஷா நகரில் நடந்த கிறிஸ்துமஸ் பேரணிக்குள் எஸ்யூவி கார் புகுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5இல் இருந்து 6 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சிறுவன் தனது சகோதரருடன் கிறிஸ்துமல் பேரணியில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் குற்றச்சாட்டப்படும் நபர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

  1. என்எஸ்ஓ எதிராக வழக்கு தொடரும் ஆப்பிள்

இஸ்ரேலிய சைபர் நிறுவனமான NSO குழுமம் மற்றும் அதன் தாய் நிறுவனமான OSY டெக்னாலஜிஸ், அமெரிக்க ஆப்பிள் பயனர்களை டார்கெட் செய்து பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணித்து வந்ததாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. முறைகேடுகளைத் தடுக்க எந்தவொரு ஆப்பிள் சாதனங்களில் ஸ்பைவேரை பயன்படுத்த NSO குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவன நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை கண்காணிப்பதாக NSO ஸ்பைவேர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனமும் அதன் வலையில் சிக்கியுள்ளது.

3. 9 ஊடக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள், பெண் நடிகர்களை உள்ளடக்கிய தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிப்பரப்ப தடை மற்றும் பெண் செய்தி தொகுப்பாளர்கள் “இஸ்லாமிய ஹிஜாப்” அணிய வேண்டும் போன்ற 9 ஊடக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.குறிப்பாக, இஸ்லாமியம் அல்லது ஆப்கானிய மதிப்புகளுக்கு முரணான எந்த செய்தியையும் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை குறிவைத்து தாலிபான்கள் போடும் சட்டங்கள், சர்வதேச சமூதாயத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

4. சமூக ஊடகத்தில் கேலி… மூத்த அதிகாரி மீது விசாரணை நடத்த இம்ரான் கான் உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது அரசாங்கத்தை ஆப்கானிஸ்தானில் தாலிபானின் இடைக்கால ஆட்சியுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட அரசு அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரவைப் பிரிவின் மூத்த இணைச் செயலாளரான ஹம்மாட் ஷமிமி, சிவில் ஊழியர்களின் (செயல்திறன் மற்றும் ஒழுக்கம்) சட்டத்திற்கு புறம்பாக சமூக வலைதளபக்கத்தில் தவறான கருத்தை பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

5. பெலாரஸின் பழமையான செய்தித்தாள் பயங்கரவாதி

பெலாரஸின் பழமையான செய்தித்தாளான நாஷா நிவா, அது நிறுவப்பட்டு 115 வது ஆண்டு விழாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

தகவல் அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில், மின்ஸ்கில் உள்ள மத்திய மாவட்ட நீதிமன்றம், அந்த செய்தி நிறுவனம் பயங்கரவாதி என முத்திரை குத்தியுள்ளது. இச்செய்திதாளில் எதேனும் கருத்துகளை பதிவிடுவருக்கோ அல்லது அதன் செய்தியை ரிபோஸ்ட் செய்பவர்களுக்கோ ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: World news today pegasus sypware imran khan christmas parade crash

Next Story
பிரெஞ்சு பிரதமருக்கு கொரோனா முதல் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு விபத்து வரை – உலகின் டாப் 5 நிகழ்வுகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express