படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி சூடு - பெண் ஒளிப்பதிவாளர் இறப்பு
Advertisment
பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின். இவர் ஜோயல் சோசா இயக்கத்தில் தயாராகும் ‘ரஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டா பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
அப்போது, சத்தம் மட்டுமே வரும் போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றது. ஆனால், அவர் சுட்டதில் நிஜ குண்டு வெளியேறி, பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பலியானார். இயக்குநர் ஜோயல் சோசா படுகாயம் அடைந்தார். தற்போது அவர், சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisment
Advertisements
மெக்ஸிகோ துப்பாக்கி சூட்டில் இந்திய ட்ரெவல் வலைப்பதிவர் உயிரிழப்பு
மெக்ஸிகோவில் துலூம் பகுதியில் உள்ள கரீபியன் கடற்கரை ரிசார்ட்டில் போதைப்பொருள் கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். அதில் ஒருவர், இந்தியாவை பூர்விகமாக கொண்ட கலிபோர்னியாவில் சான் ஜோஸை சேர்ந்த அஞ்சலி ரயாட் ஆகும். இதுகுறித்து அம்மாகாண காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது. வலைப்பதிவரான அஞ்சலி, பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதனை blog-ஆக ஆன்லைனில் பதிவிட்டு வந்துள்ளார்.
ட்ரோன் தாக்குதலில் மூத்த அல் கொய்தா தலைவரை கொன்ற அமெரிக்கா
அமெரிக்க ராணுவம், நேற்று சிரியாவில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர் அப்துல் ஹமீத் அல்-மதர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க நிலையம் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் எதிர்கால திட்டங்களை தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது.
பாலஸ்தீனிய என்ஜிஓக்கள் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம், ஆறு பாலஸ்தீனிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை "பயங்கரவாத அமைப்புகள்" என்று பட்டியலிட்டுள்ளது. இந்தக் குழுக்கள் பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் (PFLP)அமைப்பை சேர்ந்த மூத்த உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பினர் தான் 1970களில் விமானங்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர். ஐரோப்பிய அரசாங்கங்களிடமிருந்து கிடைக்கும் பணத்தை, இந்த என்ஜிஓக்கள் PFLP அமைப்புக்கு நிதியுதவியாக வழங்கிவந்ததாக குற்றஞ்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
துருக்கி லிரா மதிப்பு கடும் சரிவு
மத்திய வங்கி, வட்டி விமத்திய வங்கி, வட்டி விகிதங்களை கடுமையாகக் குறைத்த ஒரு நாளிலே, துருக்கிய லிராவின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி, பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு வெளியிட்ட பட்டியலிலும் துருக்கி இடம்பிடத்தது அதற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்நாடு பண மோசடி, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறவுள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்புடன் ஒப்பிடுகையில், எப்போது இல்லாத அளவிற்கு துருக்கி லிரா மதிப்பு 9.66 ஆக குறைந்துள்ளது. இந்தாண்டின் தொடக்கம் முதலே, லிரா அதன் மதிப்பில் 20% க்கும் அதிகமாக இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil