World Tamil News: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது சியால்கோட் மாவட்டம். இங்குள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையின் பொது மேலாளராக பணியாற்றியவர் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார. 40 வயதான இவர், தான் பணியாற்றும் அலுவலக சுவரில் ஒட்டப்பட்டிருந்த நபிகள் நாயகம் குறித்த பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்க போஸ்டரைக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியதாகக் கூறப்படுகிறது.
பிரியந்த குமார அடித்து எரித்து கொலை
இதைப் பார்த்த அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சிலர் தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்க ஆதரவாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இது “மத நிந்தனை” செயல் என்று தூண்டிவிடப்பட்டு நூற்றுக்கணக்கானோர் தொழிற்சாலைக்கு வெளியே திரண்டுள்ளனர். இதில், பெரும்பாலோர் தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
தொடர்ந்து பிரியந்த குமாரவை தொழிற்சாலையில் இருந்து இழுத்து வந்த இந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பிரியந்த குமார சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு, போலீசார் அங்கு செல்வதற்குள் அந்த கும்பல் அவரது உடலை நடுரோட்டில் வைத்தே எரித்ததுள்ளனர்.
Today. Sialkot, Pakistan.
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) December 3, 2021
When a Sri Lankan man was being burnt alive by this mob, many thought it was just the right time to take a selfie. pic.twitter.com/OPKiFAoFM4
பிரதமர் இம்ரான் கான் கண்டனம்
இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விசாரணைகளை தாம் தனிப்பட்ட முறையில் கவனித்து வருவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். “சியால்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The horrific vigilante attack on factory in Sialkot & the burning alive of Sri Lankan manager is a day of shame for Pakistan. I am overseeing the investigations & let there be no mistake all those responsible will be punished with full severity of the law. Arrests are in progress
— Imran Khan (@ImranKhanPTI) December 3, 2021
மேலும், பாகிஸ்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானின் இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த சம்பவம் குறித்த விவரங்களை சரிபார்த்து வருவதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் உஸ்மான் புஸ்தார் கண்டிப்பு
இந்த கொலையை மிகவும் சோகமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள பஞ்சாப் மாகாண முதலமைச்சர் உஸ்மான் புஸ்தார், இந்த விவகாரத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
“சம்பவத்தின் ஒவ்வொரு அம்சமும் விசாரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் அவர் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் ஹசன் கவார் கூறுகையில், “சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. “சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டு, காரணமானவர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் முடிவுகளை வெளியிடுமாறு சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு ஐஜி உத்தரவிட்டுள்ளார், அதன் பிறகு விசாரணை நீட்டிக்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.
தொடரும் மத நிந்தனை படுகொலைகள்
பாகிஸ்தானில் மரண தண்டனை உட்பட இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கவே அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக வெறும் மத நிந்தனை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வன்முறையைத் தூண்டி விடப்படுகின்றன. மேலும், மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலர் சமீப வருடங்களில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“