உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர் மரணம்

World shortest man dies : உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்த நேபாள நாட்டைச் சேர்ந்த ககேந்திர தபா மகர், நிமோனியா காய்ச்சலால் மரணமடைந்தார்.

By: Updated: January 18, 2020, 05:37:43 PM

உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்த நேபாள நாட்டைச் சேர்ந்த ககேந்திர தபா மகர், நிமோனியா காய்ச்சலால் மரணமடைந்தார். அவருக்கு வயது 27.

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை தன் வசம் வைத்திருந்தவர் நேபாளத்தை சேர்ந்த 27 வயதான ககேந்திர தபா மகர். 1992 ஆண்டு அக்.,14ல் பிறந்த மகர், 2010ம் ஆண்டு தனது 18வது வயதில் உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். அப்போது அவரது உயரம், 67.08 செ.மீ.,; எடை 6 கிலோ மட்டுமே. கடந்த ஆண்டு பிலிப்பைன்சின் ஜூன்ரேவிடம்(59.93செ.மீ., உயரம், 5 கிலோ), உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற பட்டத்தை தபா மகர் இழந்தார்.

இந்நிலையில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தபா மகர், பெகாராவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் ஜனவரி 17ம் தேதி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Worlds shortest man khagendra thapa magar dies in nepal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X