காஷ்மீரை கவனிப்பதாகக் கூறும் ஜீ ஜின்பிங்; பாகிஸ்தானின் முக்கிய நலன்களுக்கு ஆதரவு

Xi Jinping says he is watching Kashmir: சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த வாரம் பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அவர் காஷ்மீர் விவகாரத்தை கவனித்து வருவதாக கூறியுள்ளார். மேலும்,  பாகிஸ்தானின் முக்கிய நலன்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று சீன ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளது.…

By: October 9, 2019, 8:40:07 PM

Xi Jinping says he is watching Kashmir: சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த வாரம் பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அவர் காஷ்மீர் விவகாரத்தை கவனித்து வருவதாக கூறியுள்ளார். மேலும்,  பாகிஸ்தானின் முக்கிய நலன்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று சீன ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளது. இது பெரிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்  இந்த வாரம் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்துக்கு வருகிறார். அங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடபெறவிருக்கும் இவர்கள் இருவருடைய சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் உலக தலைவர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் காஷ்மீரின் நிலைமையைக் கவனித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பார் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் ஜீ ஜின்பிங் சரியும் தவறும் சூழலில் தெளிவாக உள்ளது என்று என்று கூறினார். மேலும், அந்த செய்தியில் ஜீ ஜின்பிங், கட்சிகள் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என்று கூறியதை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த ஆகஸ்ட் மாதம் முதல் காஷ்மீரில் பதற்றம் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஜீ ஜின்பிங் இந்த வார இறுதியில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இரு நாடு தலைவர்கள் சந்திக்க உள்ளதால் மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Xi jinping says he is watching kashmir supports pakistans core interests chinese media reported

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X