scorecardresearch

சிங்கத்துடன் ஜல்லிக்கட்டு விளையாடிய இளைஞர் – சுவாரஸ்ய நிகழ்வு

கோபத்தின் உச்சத்துக்கே சென்ற இளைஞர் சிங்கத்தின் தலையைப் பிடித்து, அருகிலிருந்த பாறையின் மீது மோதியிருக்கிறார்.

சிங்கத்துடன் ஜல்லிக்கட்டு விளையாடிய இளைஞர் – சுவாரஸ்ய நிகழ்வு

மேற்கு அமெரிக்காவின் கொலோரடோ மலைப்பகுதியின் அடிவாரத்தில், ஏராளமான சிங்கங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் ஓர் இளைஞர் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, மறைந்திருந்த மலை சிங்கம் ஒன்று பாய்ந்து வந்து அவரை பின்னால் இருந்து தாக்கியது. ஆனால் அந்த இளைஞரோ, பயந்து ஓடாமல் கைகளை மேலே தூக்கியவாறு அதனிடம் போராடி, சிங்கத்துக்கே ‘டஃப் ஃபைட்’ கொடுத்திருக்கிறார்.

பிறகு யோசித்த சிங்கம் உடனே அந்த இளைஞரின் மணிக்கட்டை தனது பற்களால் கவ்வி இழுத்தது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற இளைஞர் சிங்கத்தின் தலையைப் பிடித்து, அருகிலிருந்த பாறையின் மீது மோதியிருக்கிறார். வலி தாங்க முடியாத அந்த சிங்கம் ஒருவழியாக இளைஞரின் மணிக்கட்டை விட்டு விட்டு, இறந்து போயிருக்கிறது.

தற்போது அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிங்கத்துடன் சண்டையிட்டு வென்ற அந்த இளைஞரின் புகழ் தற்போது மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Young man fights with lion face to face

Best of Express