பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, அதன் துருப்புக்கள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் சிவிலியன் தளங்களை அதிகளவில் தாக்கி வருகின்றன.
தெற்கு உக்ரேனிய நகரமான எனர்ஹோடரில் உள்ள மின் நிலையத்தை ரஷ்யா தாக்கியதை அடுத்து, அணு உலை எரிந்து வருவதாக ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 25% மின் உற்பத்தியை வழங்கும் ஜபோரிஜ்ஜியா (Zaporizhzhia) அணுமின் நிலையத்திற்கு அருகில் உயர்ந்த அளவிலான கதிர்வீச்சு கண்டறியப்படுகிறது.
ரஷ்யப் படைகள் வியாழன் அன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தைக் கொண்ட உக்ரேனிய நகரத்தின் கட்டுப்பாட்டிற்காகப் போரிட்டு, நாட்டை கடலில் இருந்து துண்டிக்கும் முயற்சியில் களம் இறங்கினர். இதனால் உக்ரேனியத் தலைவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக குடிமக்களை கொரில்லாப் போரை நடத்துமாறு அழைப்பு விடுத்தனர்.
இதற்கிடையே’ வெறும் ஏழு நாட்களில் நடந்த சண்டையில், உக்ரைனின் 2%க்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில்’ உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார், இந்த திட்டத்தை தனக்கே உரிய பாணியில் கிண்டலுடன் அவர் கூறினார்.
"பேச்சுவார்த்தைக்கு என்னுடன் உட்காருங்கள், 30 மீட்டருக்கு அந்த பக்கம் அல்ல". “நான் கடிக்க மாட்டேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்?" என்று ஜெலன்ஸ்கி வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்தபோது, மிக நீண்ட மேசையின் ஒரு முனையில் புதின் அமர்ந்திருக்கும் சமீபத்திய புகைப்படங்களைக் குறிப்பிட்டு, ஜெலன்ஸ்கி இப்படி பேசியதாக தெரிகிறது.
பேச்சுக்களை நடத்துவது விவேகமானது. "எந்த வார்த்தைகளும் காட்சிகளை விட முக்கியம்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“