போரை முடிக்க விரும்புகிறார் டிரம்ப்; இந்தியா -ரஷ்யா எண்ணெய் வர்த்தகத்திற்கு அமரிக்க வரி விதிப்பு சரியான யோசனை - ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீதான போருக்காக ரஷ்யா மீது இரண்டாவது கட்டத் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான போருக்காக ரஷ்யா மீது இரண்டாவது கட்டத் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Zelenskyy India Russia trade

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, டிரம்ப் "இந்த போரை முடிக்க விரும்புவதாக" தான் நினைப்பதாகக் கூறினார். Photograph: (AP)

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த தொடர்ச்சியான விவாதங்கள் பற்றிப் பல உலகத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் இந்தியா போன்ற நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக வரிகள் விதிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகத் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் "இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக" தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

"ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது வர்த்தக வரிகள் விதிக்கும் யோசனை... இது சரியான யோசனை என்று நான் நினைக்கிறேன்," என்று ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான ஏபிசி நியூஸ் பேட்டியில் கூறினார்.

வர்த்தக வரிகள் மற்றும் இந்தியா - ரஷ்யா இடையேயான எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக வாஷிங்டனுக்கும் புது டெல்லிக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியா தனது கொள்முதல் பொருளாதார மற்றும் வணிகக் காரணங்களால் உந்தப்பட்டுள்ளது என்று கூறி வருகிறது.

உக்ரைன் மீதான போருக்காக ரஷ்யா மீது இரண்டாவது கட்டத் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறினார். எனினும், அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

பொருளாதார மற்றும் வணிகக் காரணங்களால் இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் உந்தப்பட்டு உள்ளதால், தொடர்ந்து மாஸ்கோவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்கா 'இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டதாக' கூறிய நிலையில், ஒரு நாள் கழித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான உறவுகளை 'சிறப்பானவை' என்று அழைத்தார். டிரம்பின் சமீபத்திய கருத்துகளுக்குப் சனிக்கிழமை பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபரின் உணர்வுகளையும் இருதரப்பு உறவுகள் பற்றிய "நேர்மறையான மதிப்பீட்டையும்" தான் ஆழ்ந்த அளவில் பாராட்டுவதாகவும் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

உக்ரைனுக்கு வெற்றி என்றால் என்ன - ஜெலென்ஸ்கி

உக்ரைனுக்கு வெற்றி என்றால் என்ன என்று பேட்டி எடுப்பவர் கேட்டபோது, உயிர் பிழைப்பதே ஒரு வெற்றி என்று ஜெலென்ஸ்கி விளக்கினார். “வெற்றி என்பது... உக்ரைனைக் கைப்பற்றுவது புதினின் இலக்கு. அவர் எங்களைக் கைப்பற்றாத வரை, நாங்கள் வெற்றி பெறுவோம். நான் அப்படி நினைக்கிறேன். ஏனென்றால் எங்களிடம் எங்கள் நாடு உள்ளது. அவர் அதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்கிறார். நிச்சயமாக அவர் எங்களை முழுமையாகக் கைப்பற்ற விரும்புகிறார். அவருக்கு அதுதான் வெற்றி. அதுவரை, வெற்றி எங்கள் பக்கம்தான்,” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

“எங்களைப் பொறுத்தவரை, உயிர் பிழைப்பதுதான் வெற்றி. ஏனென்றால், நாங்கள் எங்கள் அடையாளம், எங்கள் நாடு, எங்கள் சுதந்திரத்துடன் உயிர் பிழைத்து வருகிறோம்” என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார்.

Ukraine

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: