உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மளிகை கடையில் கிடைக்கும் எளிய பொருட்களே போதும். ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குப்தா, இன்சுலின் அதிகரிப்பதற்கான பயனுள்ள 10 உணவுகளை பரிந்துரைக்கிறார்.
1. வால்நட், பாதாம் போன்ற நட்ஸ் வகைகள்
2. சியா விதைகள்
3. கோதுமை, ராகி போன்ற தினை வகைகள்
4. தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்
5. முட்டை, இறைச்சி
6. இலவங்கப்பட்டை, மஞ்சள்
7. டுனா, சால்மன், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்
8. பெர்ரி பழங்கள்
9. கீரை, வெந்தயம், முட்டைக்கோஸ், கேரட், ப்ரோக்கோலி, மிளகுத்தூள் போன்ற காய்கறிகள்
10. ஆளிவிதை எண்ணெய்
பெங்களூரு, ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவ உணவியல் நிபுணர் வீனா வி, இது போன்ற உணவுகள் சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாது, கூடுதலாக இவை, இன்சுலின் சுரப்பதை தடுக்கும் காரணிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: 10 ‘must-buy foods’ to control your blood sugar level are…
இந்த உணவுகள் ஆரோக்கியமான காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளின் ஒரு பகுதியாகும். அவை தீங்கு விளைவிக்காத ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டிருக்கின்றன மற்றும் அவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை தரும்”என்று வீணா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“