மினி அதிசயங்கள்: உலகை வியக்க வைக்கும் 10 அழகிய & தனித்துவமான பூச்சிகள்!

நமது உலகில், கலைப்படைப்புகள் என கருத்தப்படும் வகையில் அற்புதமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களுடன் கூடிய பூச்சிகள் நிறைந்துள்ளன. உலகின் சில மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான வண்ணமயமான பூச்சிகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

நமது உலகில், கலைப்படைப்புகள் என கருத்தப்படும் வகையில் அற்புதமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களுடன் கூடிய பூச்சிகள் நிறைந்துள்ளன. உலகின் சில மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான வண்ணமயமான பூச்சிகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
colourful insects

உலகிலேயே மிக அழகான 10 பூச்சிகள்!

வெளிர் இளஞ்சிவப்பு நிற மான்டிஸ்கள், பொன்னிற வண்டுகள், ஹம்மிங்பேர்டு பறவை போலப் பறக்கும் அந்துப்பூச்சிகள், ஓவியம் தீட்டியது போன்ற ஸ்டின்க் பக்குகள் என, உலகிலுள்ள பல பூச்சிகள் கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தால் சற்றும் பொருத்தமற்றதாகத் தோன்றாது.

Advertisment

பிபிசி வைல்ட்லைஃப் (BBC Wildlife) கூற்றுப்படி, இந்த பூச்சிகளின் தனித்துவமான தோற்றத்திற்குப் பல காரணங்கள் உள்ளன: உருமறைப்பு, இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு. ஆர்க்கிட் மான்டிஸ் போன்ற பூச்சிகள் தங்கள் சுற்றுப்புறத்துடன் ஒன்றிப்போவதன் மூலம் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்கின்றன அல்லது தங்கள் இரைகளுக்குத் தெரியாமல் மறைந்துவிடுகின்றன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கோஸ்டல் பீகாக் ஸ்பைடர் போன்ற பூச்சிகள் துணையை ஈர்க்கத் துடிப்பான வண்ணங்களைக் காட்டுகின்றன. கிரீன் மில்க்வீட் லோகஸ்ட் போன்ற கவர்ச்சியான பூச்சிகள், தாங்கள் விஷத்தன்மை வாய்ந்தவை (அ) சுவையாக இருக்காது என்று எச்சரிக்க தங்கள் வண்ணங்களைக் காட்சிப்படுத்துகின்றன. உலகின் சில மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான வண்ணமயமான பூச்சிகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment
Advertisements

1.பிகாசோ பக் (Picasso Bug)

இந்த ஸ்டின்க் பக் (Stink bug) அதன் பெயருக்கு ஏற்றாற்போல், புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவின் ஓவியங்கள் போல, உடலின் மீது வியக்க வைக்கும் வடிவங்களையும், பிரகாசமான வண்ணங்களையும் கொண்டுள்ளது. இதன் அற்புதமான நிறங்கள், வேட்டையாடுபவர்களை எச்சரிக்கும் ஒரு பாதுகாப்பு உத்தியாகச் செயல்படுகின்றன.

2. ஆர்க்கிட் மான்டிஸ் (Orchid Mantis)

மலர்களின் ராணியான ஆர்க்கிட் பூக்களைப் போலவே தோற்றமளிக்கும் இந்த மான்டிஸ், தன் உருமறைப்பு திறனால் இரையை எளிதாகக் கவர்கிறது. இதன் உடல் வடிவம் மற்றும் வண்ணங்கள் ஆர்க்கிட் பூக்களையே ஒத்திருப்பதால், இரைகள் இதை பூவென நம்பி அருகில் வரும்போது, அவை மான்டிஸின் இரையாகின்றன.

3.ஹம்மிங்பேர்ட் மோத் (Hummingbird Moth)

பகலில் பறக்கும் இந்த அந்துப்பூச்சி, ஹம்மிங்பேர்ட் பறவையைப் போலவே தேனை உறிஞ்சி உண்ணும். இதன் இறக்கைகளின் வேகமான அசைவும், பறக்கும் விதமும் ஒரு ஹம்மிங்பேர்ட்டைப் போலவே இருக்கும். இந்த மோத் அந்துப்பூச்சி வகையைச் சேர்ந்தது என்பது பலருக்கும் வியப்பளிக்கும்.

4. குக்கூ குளவி (Cuckoo Wasp)

பளபளக்கும் உலோக நிறங்களைக் கொண்ட இந்த குளவி, ஒளியின் ஒளிவிலகல் மற்றும் அதன் உடலின் மேற்பரப்பில் உள்ள நுண்மையான குழிவான அமைப்புகள் காரணமாக மின்னும் தோற்றத்தை அளிக்கிறது. இதன் பிரகாசமான நிறங்கள், எச்சரிக்கை சமிக்ஞையாகவும் செயல்படலாம்.

5.கிரீன் மில்க்வீட் லோகஸ்ட் (Green Milkweed Locust)

இந்த அழகான பச்சை வெட்டுக்கிளிகள், அச்சுறுத்தப்படும்போது தங்கள் வண்ணமயமான இறக்கைகளை விரித்து வேட்டையாடுபவர்களை எச்சரிக்கின்றன. மேலும், தற்காப்புக்காக ஒருவித திரவத்தையும் சுரக்கின்றன.

6.தோர்ன் பக் (Thorn Bug)

முட்களின் ராஜாவாக அறியப்படும் இந்த பூச்சி, தாவரங்களின் முட்களைப் போலவே தங்களைத் தகவமைத்துக் கொள்கிறது. இவை கூட்டமாக தாவரங்களின் தண்டுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, அவை உண்மையில் பூச்சிகள் என்பதை கண்டறிவது மிகவும் கடினம். இதுவும் ஒரு சிறந்த உருமறைப்பு உத்தி.

7. ரோஸி மேபிள் மோத் (Rosy Maple Moth)

இந்த சிறிய அந்துப்பூச்சி, இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களின் அழகான கலவையால் அனைவரையும் கவரும். இந்த மென்மையான வண்ணங்கள் இதனை தனித்துவமாக்குகின்றன.

8. கிரேஸ் லீஃப் இன்செக்ட் (Gray's Leaf Insect)

வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் இந்த பூச்சிகள், உலர்ந்த அல்லது பச்சையான இலைகளைப் போலவே தோற்றமளிக்கின்றன. இவை தாவரங்களின் மீது இருக்கும்போது, அவற்றை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இவற்றுக்கு "நடக்கும் இலைகள்" என்ற செல்லப்பெயரும் உண்டு.

9. கோஸ்டல் பீகாக் ஸ்பைடர் (Coastal Peacock Spider)

இந்த ஆண் சிலந்திகள், பெண் சிலந்திகளைக் கவர, தங்கள் அற்புதமான வண்ணமயமான உடலைக் கொண்டு ஒரு சிக்கலான நடனத்தை நிகழ்த்துகின்றன. ஒரு சிறிய நடன அரங்கையே உருவாக்கும் இவர்களின் முயற்சி நிச்சயம் கண்கவர் தான்.

10. கோல்டன் டார்ட்டாய்ஸ் பீட்டில் (Golden Tortoise Beetle)

ஒரு சிறிய தங்க நாணயம் போல தோற்றமளிக்கும் இந்த வண்டு, அதன் வெளிப்படையான ஓரங்களுடன் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். ஆனால், இது இறந்தவுடன் அதன் உலோகப் பளபளப்பு மங்கிவிடுகிறது என்பது ஒரு சோகமான உண்மை.

இந்த பூச்சிகள் இயற்கையின் நுட்பமான வடிவமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் அதிசயங்களை நமக்கு உணர்த்துகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான அழகையும், வாழ்வதற்கான போராட்டத்தில் அவற்றின் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்த அற்புத படைப்புகளைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: