ராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழா: திருக்கோவலூரில் கொண்டாட்டம்

மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களின் கலாபக்தி மற்றும் சுவாமிகள் வேடம் அணிந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் விழாவின் முக்கிய அம்சமாக விளங்கின.

மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களின் கலாபக்தி மற்றும் சுவாமிகள் வேடம் அணிந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் விழாவின் முக்கிய அம்சமாக விளங்கின.

author-image
WebDesk
New Update
1cced87a-1bd2-4b4c-a050-41ccdb1a4f70 (1)

திருக்கோவலூரில் பிறந்த பேரரசர் மாமன்னன் இராசராஜ சோழனின் 1,040ஆவது சதய விழா இன்று பெருமையுடன் மற்றும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா முன்னிட்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருந்து சதய ஊர்வலம் மிகத் திரசமான முறையில் நடைபெற்றது. மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களின் கலாபக்தி மற்றும் சுவாமிகள் வேடம் அணிந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் விழாவின் முக்கிய அம்சமாக விளங்கின.

Advertisment

சதய ஊர்வலத்தில் இன்றைய தலைமுறையினர் ராஜராஜ சோழனின் நகர்வலை அறிந்து கொள்ளும் வகையில் மாமன்னர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்த இந்த ரத ஊர்வலம் இறுதியில் பெரிய கோவிலில் முடிவுற்றது.

திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், பார்க்கவகுல உடையார் திருமணமண்டபத்தில் சதய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமையில், செயலாளர் மு. அன்பழகன் வரவேற்பு தெரிவித்தார். துணைத்தலைவர் பா. கார்த்திகேயன், அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு, பொருளாளர் சி.குரு ராசன் முன்னிலை வகித்தனர்.

கோவலடிகள் ம.ரா.குமாரசாமியார் அறக்கட்டளை தலைவர் தணிகை கலைமணி இராசராஜ சோழன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கலாம் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பொன் முருகன், கவிஞர்கள் இராம சுதாகரன், கலியபெருமாள், கவிநிலவன், மித்ரா தேவி ஆகியோர் “தண்டமிழ் நாடன் இராசராச சோழன்” என்ற தலைப்பில் புகழஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

இந்த விழாவில் கோவல் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்திலிருந்து நிறைவு வரை நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ராஜராஜ சோழனின் பெருமை மற்றும் தமிழர் கலாச்சார பாரம்பரியத்தை மக்களிடையே வலுப்படுத்தியது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: