ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடியது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது.
Advertisment
ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடியது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்நிலையில், வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கான பாராட்டு விழா கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisment
Advertisements
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்களை பாராட்டி பரிசு வழங்க உள்ளார்.
மேலும், முதல்வர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பெண்கள் ஒரே நேரத்தில் வள்ளி கும்மி நடனம் ஆடினர்.
மேலும், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பெண்கள் வள்ளி, கும்மி நடனமாட ஏதுவாக மைதானம் அமைக்கப்பட்டதோடு, அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான உடையணிந்து நிகழ்ச்சியில் நடனம் ஆடினர்.