2 எலுமிச்சை போதும்… மல்லிகை பூத்துக் குலுங்க இப்படி கரைசல் செய்து யூஸ் பண்ணுங்க!
கொத்துக் கொத்தாக மல்லிகையை பூத்துக் குலுங்க வைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கான டிப்ஸ் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதும் மிக எளிதாக இருக்கும்.
கொத்துக் கொத்தாக மல்லிகையை பூத்துக் குலுங்க வைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கான டிப்ஸ் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதும் மிக எளிதாக இருக்கும்.
2 எலுமிச்சை போதும்… மல்லிகை பூத்துக் குலுங்க இப்படி கரைசல் செய்து யூஸ் பண்ணுங்க!
பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே மிக மிக அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக இந்த மல்லிகை பூ என்றால் பிடிக்காத ஆளே இங்கு இருக்கவே மாட்டார்கள். அதனால் இன்றைய சூழலில் அனைவருமே தங்களது வீடுகளில் உள்ள தோட்டம் அல்லது மாடி தோட்டங்களில் நமது மனதிற்கு மிகவும் பிடித்த இந்த மல்லிகை பூச்செடியை அனைவருமே தங்களது வீடுகளில் வளர்க்கிறார்கள். அப்படி மல்லிகை பூச்செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது மல்லிகை பூச்செடியை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்கலாம்.
Advertisment
மல்லிகை பூ அதிகமாக பூப்பதற்கு இயற்கையான முறையிலேயே உரம் தயாரிக்க முடியும். இதற்கான கரைசலை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு தயாரிக்கலாம். இதனால் பெரிய அளவில் செலவும் ஏற்படாது. வீட்டில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு அதன் தோலை குப்பையில் தான் பெரும்பாலும் போடுவோம். ஆனால், இந்த கரைசல் செய்வதற்கு மூலப்பொருளே எலுமிச்சை தோல் தான். அதனால், சுமார் 4 அல்லது 5 எலுமிச்சை தோலை சேகரித்துக் கொள்ளலாம்.
செய்முறை:
எலுமிச்சை பழத்தில் சாறு பிழிந்துவிட்டு மீதமுள்ள தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பாட்டிலில் தண்ணீர் சேர்த்து நறுக்கிய எலுமிச்சை துண்டுகளை அதில் சேர்த்து 3 நாட்கள் நிழலில் ஊரவைக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு அதனை வடிகட்டி எடுத்து மற்றோரு பாட்டில் சேகரித்து அதனுடன் 2 லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து (1:2 விகிதத்தில்) ஸ்பிரே பாட்டிலில் சேகரித்து வைக்க வேண்டும். இதனை மல்லிகை பூச்செடிகளில் தெளிக்க வேண்டும். இதனால், மல்லிகை செடி வளர்ச்சி அதிகரித்து பூக்கள் பூத்து குலுங்கும். பூச்சித் தொலை கட்டுப்படுத்தும்.