குழந்தைகள் ஒன்றரை வயது வரை விரல் சூப்புவது இயற்கையான ஒன்றுதான் ஆனால் அதற்கு மேல் தொடரும்போது தான் அது ஆபத்தாகிறது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். மேலும் அதனை நிறுத்தும் வழிமுறை குறித்தும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
வயது ஏற ஏற, விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டைவிரல் உறிஞ்சுவதால் குழந்தைகளுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் புட்டி பாலுக்கு மாறும்போது இந்த பிரச்சனை வரும். பால் பாட்டில்களில் பால் குறையும் நேரத்தில் வெறும் பாட்டிலை வாயில் வைத்துக் கொண்டு குழந்தைகள் வைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்போது பாட்டிலை வாங்கிவிட்டால் கைவிரலை சூப்பத் தொடங்குவார்கள்.
டிப்ஸ் 1: மிரட்டி பழக்கத்தை நிறுத்தல். அதுமட்டுமின்றி நீ இதை நிறுத்தினால் உனக்கு நீ கேட்கும் பொருள் வாங்கி தருகிறேன் என்று கூறுவது. இதுமாதிரி செய்கிறேன் என்று கூறுவது விரல் சூப்பும் பிரச்சனையை நிறுத்த முடியும். இந்த பழக்கத்தில் இருந்து குழந்தை மீள இந்த வழிகளை பயன்படுத்துங்கள்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 2: பல் மருத்துவரை பார்த்து குழந்தைக்கு வாயில் க்ளிப் மாதிரி போடலாம். அது வாயில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்தும்.
மற்றபடி வேப்ப எண்ணெய் தடவுவது கிளவுஸ் போடுவது இந்த பழக்கதை நிறுத்த பயன் அளிக்காது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.