அழிவின் விழிம்பில் 200 ஆண்டுகள் பழமையான சப்போட்டா மரம்.. பாதுகாக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள்
ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மணில்கரா கௌகி என்ற பழமையான சப்போட்டா மரம் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த பழமையான மரம் தற்போது போத்தனூர் ரயில்வே மருத்துவமனை அருகே தென்பட்டுள்ளது.
கோவை போத்தனூர் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட அழிவின் விளிம்பில் உள்ள மரத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisment
பறவைகள் புழு பூச்சிகளுக்கு மட்டுமல்லாமல் மனிதனுக்கும் இயற்கைக்கும் பல்வேறு பயனாய் இருப்பது மரங்கள். இப்படி இயற்கையின் வரமான மரத்தை பாதுகாப்பது மனிதர்களின் முக்கிய கடமையாக உள்ளது.
200 ஆண்டுகள் பழமையான சப்போட்டா மரம் விதை சேகரிப்பில் சமூக ஆர்வலர் பழமையான மரத்தின் சப்போட்டா பழம்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மணில்கரா கௌகி என்ற பழமையான சப்போட்டா மரம் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த பழமையான மரம் தற்போது போத்தனூர் ரயில்வே மருத்துவமனை அருகே தென்பட்டுள்ளது.
ஆகவே இந்த அழிவின் விளிம்பில் உள்ள மரத்தை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதற்காக பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆரண்யா வனம் அமைப்பின் நிறுவனர் சரவணன் இந்த மரத்தின் விதைகளை சேகரித்து அதைச் செடியாக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். இவருக்கு உதவியாக கோவையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் பாரதிதாசன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் விதை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் சிட்டுக்குருவி பாண்டியராஜன்
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சிட்டுக்குருவி பாண்டியராஜன் கூறியதாவது; சப்போட்டாவின் தாய் மரமான மணில்கரா கௌகி மரம் கோவை போத்தனூரில் தென்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இந்த மரம் பழமையானது.
மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அதிக அளவில் தென்படாத இந்த மரத்தை காப்பது நமது கடமை. மேலும் இந்த மரத்தின் மூலம் சப்போட்டா பழத்திற்கு ஒட்டுச்செடி உற்பத்தி செய்யலாம். அரிதான மரமான இதை அதிகரிக்க இதன் விதை மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். இந்த மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆரண்யா வனம் அமைப்பு முயன்று வருகிறது.
இதற்கான விதை சேகரிப்பில் அருளகம் அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த மரத்தின் நன்மையை அறிந்து வரும் இப்பகுதியை கடந்து செல்பவர்களும் இதன் விதையை சேகரித்து செல்கின்றனர். அதேபோல மரத்தில் இருந்து விழும் பழங்களை எடுத்து உண்டு மகிழ்கின்றனர் என தெரிவித்தார்.
இயற்கையின் வரமான மரங்களை பல்வேறு நோக்கத்திற்காக வெட்டி அகற்றி வரும் சூழலில் அழிவின் விளிம்பில் உள்ள ஒரு மரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எடுத்துள்ள முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“