கடின உழைப்பில்லாமல் எடை குறையாது. ஒருபுறம் ஸ்ட்ரிக்ட் டயட், மறுபுறம் உடற்பயிற்சி என தொடர்ந்து பின்பற்றினால் தான் நம்முடைய ஐடியல் வெயிட்டை அடைய முடியும்.
எடை குறைப்பில் ஈடுபட்டு, தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்படியென்றால் இந்த புரோட்டின் ரிச் சூப் உங்களுக்குத் தான்!
பசியைக் கட்டுப்படுத்தி, தொப்பையைக் குறைக்கும் வல்லமை புரோட்டினுக்கு மிக அதிகம். அதனால் டயட்டில் இருக்கும் நீங்கள் புரோட்டீனை மறக்காமல் சேர்த்துக் கொள்ளவும். சரி புரோட்டீன் ரிச் சூப் வகைகளை இங்கே பார்ப்போம்.
க்ளியர் சிக்கன் சூப்
சிக்கன் பிரியர்களே இது உங்களுக்காகத் தான்! உங்களது எடையில் எக்ஸ்ட்ரா கிலோவைக் குறைக்க இது உறுதுணையாக இருக்கும். மறக்காமல் இந்த சூப்பில் மிளகினை சேர்த்துக் கொள்ளுங்கள். இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, எடையையும் குறைக்கும்.
சன்னா சூப்
ஒருவேளை நீங்கள் வெஜிடேரியனாக இருந்து, சிக்கன் சூப்பை குடிக்க முடியாது எனில், சன்னா சூப்பை முயற்சி செய்து பாருங்கள். அதிக நியூட்ரிஷியன் நிறைந்த சன்னாவை சூப்பாக செய்து, மாலை நேரமோ அல்லது இரவு உணவுடனோ சாப்பிடலாம்.
காட்டேஜ் சீஸுடன் பசலைக் கீரை சூப்
இன்னுமொரு வெஜிடேரியன் சூப். புரோட்டீன் அதிகமாக இருக்கும் காட்டேஜ் சீஸுடன், பசலைக் கீரை சூப். இவையிரண்டுமே உடல் நலத்திற்கு உகந்தது. அதோடு எடை குறைப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அப்புறம் என்ன? இதில் உங்களுக்குப் பிடித்த சூப்பை முயற்சி செய்து, ஆரோக்கிய நலனைப் பெற்றிடுங்கள்.