/tamil-ie/media/media_files/uploads/2021/10/getty_skincare_1200.jpg)
3 ingredient facepack to chase away the winter blues Tamil News
3 ingredient facepack to chase away the winter blues Tamil News : குளிர்காலத்தில், வறட்சி மற்றும் அரிப்புகளைத் தடுக்க நமது சருமத்திற்கு வழக்கத்தை விட சற்று அதிக பராமரிப்பு தேவை. குளிர்கால தோல் பராமரிப்பு முறைகள் பற்றிய தெளிவு இந்தியாவில் அவ்வளவாக இல்லை. வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகள், இயற்கையான ஸ்க்ரப்கள், மாய்ஸ்சரைசர்கள் போன்றவை சமையலறையில் எளிதாகக் காணப்படும் ஒரு சில பொருள்களைக்கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன.
இந்த மூன்று பொருள்கள் மட்டுமே போதும், வீட்டிலேயே சூப்பரான மாய்ஸ்ச்சரைசரை எளிதில் தயார் செய்து பயன்படுத்தலாம். இது குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் உணர வைக்கும். இந்த மாய்ஸ்ச்சரைசர் ரோஸ் வாட்டர் மற்றும் வைட்டமின் E ஆகியவற்றின் நன்மையால் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களின் கலவை, ஈரப்பதத்தைக் குறைக்காமல் பிரகாசமான சரும பொலிவை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
*ரோஸ் வாட்டர்- 1 டேபிள்ஸ்பூன்
கிளிசரின் --- 50 மிலி
*வைட்டமின் E காப்ஸ்யூல் —-1
செய்முறை
*ஒரு சுத்தமான பாத்திரத்தில் தேவையான பொருட்களை ஒன்றாகக் கலக்கவும்
*பிறகு, தேவையான அளவை தேவைப்படும்போது சருமத்தில் பயன்படுத்தவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.