/indian-express-tamil/media/media_files/2025/10/06/download-2025-10-06t192-2025-10-06-19-22-19.jpg)
“தொந்தி மட்டும் குறைக்கவேண்டும்” என்று நினைப்பது சரியான வழி அல்ல. உண்மையான மாற்றம், முழு உடலையும் கவனித்தால்தான் நிகழும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்று பலர் வயிற்றை மட்டுமே குறைக்க வேண்டும், பேலி இறுக்க வேண்டும் என குறிப்பிட்ட பகுதிகளையே குறைக்கும் நோக்கத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் விஞ்ஞான ரீதியாக “ஸ்பாட் ரிடாக்ஷன்” என்பது தவறான எண்ணமாகும். உணவுமுறை, உடற்பயிற்சி, தூக்கம், மனநிலையை உள்ளடக்கிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் தான் முழு உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்கச் செய்யும். முழு உடலின் எடையை குறைத்தால், மாரடைப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயம் குறையலாம். மூட்டு வலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் சீராகும். மேலும் சுறுசுறுப்பு, ஆற்றல், மனநலன், மற்றும் தன்மை நம்பிக்கையும் அதிகரிக்கும்.
முழு உடல் பயிற்சிகள் — உதாரணமாக வாக்கிங், சைக்கிளிங், நீச்சல், யோகா, அல்லது ஹை இன்டென்ஸிட்டி பயிற்சி ஆகியவை உடல் முழுவதும் வேலை செய்ய வைத்து, உடல்மாற்றத்தை உருவாக்கும். வெறும் “ஆப்ஸ்” பயிற்சி மட்டும் செய்தால் வயிறு குறையாது; அது மட்டும் போதாது. உணவுமுறையும் அதற்கேற்ப மாற வேண்டும். அதாவது, புரதம் அதிகம் உள்ள உணவு, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், சர்க்கரை மற்றும் வெள்ளை அரிசி குறைத்தல் போன்றவை முழு உடலை மாற்றும். மன அழுத்தமும் எடை அதிகரிக்க காரணம் ஆகலாம், எனவே தூக்கம் மற்றும் மன அமைதியும் அவசியம்.
நீண்ட நாள் பயனுக்கு, மெதுவாகவும் நிலையான முறையிலும் எடையைக் குறைக்க வேண்டும். கிராஷ் டயட், கீடோ டயட் மாத்திரைகள் போன்றவை தற்காலிகம் மட்டுமே. உண்மையான மாற்றம் உங்கள் வாழ்க்கைமுறையிலேயே உள்ளது. உடல் என்பது ஒரு ஒத்துழைப்பான அமைப்பு. ஒரு பகுதிக்கே மட்டும் கவனம் செலுத்துவது போதாது. முழு உடலை கவனித்து, மாற்றங்களை ஏற்படுத்தினால்தான் நீடித்த ஆரோக்கியம், நல்ல மனநிலை மற்றும் வாழ்நாள் சீரான வாழ்க்கை கிடைக்கும்.
3 எளிய பயிற்சிகள்!
இது அனைத்தையும் தாண்டி எளிய 3 பயிற்சிகள் மூலம் முழு உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.
- முதல் பயிற்சியாக கைகள் இரண்டையும் மேலே தூக்கி பிடித்து நேராக நின்று கால் பாதத்தை மற்றும் தூக்கி இறக்க வேண்டும்.
- அடுத்ததாக ஒற்றை காலை பின்னாடி வைத்து அதை மடக்கி மடக்கி நின்ற இடத்திலேயே ஓடுவது போல செய்ய வேண்டும்.
- மூன்றாவதாக கால்களை நன்கு விரித்து ஸ்குவாட் செய்து கொஞ்சம் நேரம் ஹோல்டு செய்து விட்டு பிறகு மீண்டும் நேராக நிற்க வேண்டும்.
இந்த பயிற்சிகளை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், தினமும் 10 முறை 3 செட்களாக செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.