4000 வருட ரகசியம்… சருமம் பளபளப்பாக இதை டிரை பண்ணுங்க; டாக்டர் கார்த்திகேயன்
'4000 வருட ரகசியம் இது!' என்ற தலைப்பில் டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோ முல்தானி மட்டியின் நன்மைகள் குறித்தும் அறிவியல் பூர்வமாகவும், அனுபவ ரீதியாகவும் எடுத்துரைத்து விளக்கி உள்ளார்.
'4000 வருட ரகசியம் இது!' என்ற தலைப்பில் டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோ முல்தானி மட்டியின் நன்மைகள் குறித்தும் அறிவியல் பூர்வமாகவும், அனுபவ ரீதியாகவும் எடுத்துரைத்து விளக்கி உள்ளார்.
4000 வருட ரகசியம்… சருமம் பளபளப்பாக இதை டிரை பண்ணுங்க; டாக்டர் கார்த்திகேயன்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த முல்தானி மட்டி, சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்குகிறது. '4000 வருட ரகசியம் இது!' என்ற தலைப்பில் டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோ முல்தானி மட்டியின் நன்மைகள் குறித்தும் அறிவியல் பூர்வமாகவும், அனுபவ ரீதியாகவும் எடுத்துரைத்து விளக்கி உள்ளார். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
முல்தானி மட்டி என்றால் என்ன? அதன் பின்னணி:
முல்தானி மட்டி என்பது பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் அதிகமாகக் கிடைக்கும் ஒரு வகை களிமண். ஆனால், இதன் புகழ் தேசம் தாண்டி உலகமெங்கும் பரவியுள்ளது. நம்முடைய பாட்டிமார்கள் மற்றும் அம்மாக்கள் முகத்தில் பூசி அழகு பெற்றது இந்த முல்தானி மட்டிதான். வெறும் அழகுப் பொருளாக மட்டுமின்றி, இது மருத்துவ குணங்களையும் கொண்டது என்பது பலருக்குத் தெரியாது.
அறிவியல் சொல்லும் உண்மை:
Advertisment
Advertisements
2019-ம் ஆண்டு வெளியான 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் காஸ்மெடிக் சயின்ஸ்' ஆய்வுக் கட்டுரை முல்தானி மட்டியின் மருத்துவ குணங்களை உறுதி செய்துள்ளது. இதில் மெக்னீசியம் ஆக்சைடு, சிலிக்கா, இரும்பு ஆக்சைடு மற்றும் கால்சியம் பெண்டோனைட் போன்ற 50-க்கும் மேற்பட்ட அரிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும், புத்துயிர் பெறவும் உதவுகின்றன. மற்ற களிமண்ணைப் போல சருமத்தில் உள்ள நல்ல மற்றும் கெட்ட எண்ணெய்கள் அனைத்தையும் உறிஞ்சாமல், தேவை இல்லாதவற்றை மட்டும் பிரித்தெடுத்து நீக்கும் திறன் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
வெயிலுக்கு இதமான குளுமை:
வெயிலுக்கு சருமம் சிவந்து போவதும், எரிச்சல் அடைவதும் சகஜம். ஆனால், முல்தானி மட்டிக்கு இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை உண்டு. வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், நாசா கூட இதன் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் காக்கும் பண்புகளை ஆய்வு செய்துள்ளது. விண்வெளி வீரர்களின் உடைகளில் சரும வெப்பநிலையை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாமா என்று அவர்கள் பரிசீலித்து வருவது இதன் மகத்துவத்திற்கு ஒரு சான்று என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
உண்மையான முல்தானி மட்டியை எப்படி கண்டறிவது?
சந்தையில் வெள்ளை நிறத்தில் ப்ளீச் செய்யப்பட்ட முல்தானி மட்டி கிடைக்கிறது. ஆனால், உண்மையானது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். அதை வாங்கி கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வைப்பது நல்லது.
முல்தானி மட்டி ஃபேஸ் மாஸ்க் போடுவது எப்படி?
உங்கள் சருமத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும், பொலிவு பெறவும் எளிய முல்தானி மட்டி ஃபேஸ் மாஸ்க் போடுவது சிறந்த வழி. இதோ அதற்கான செய்முறை:
தேவையான பொருட்கள்:
2 தேக்கரண்டி முல்தானி மட்டி
1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர்
1 தேக்கரண்டி சுத்தமான தேன்
3 துளிகள் வேப்ப எண்ணெய் (முகப்பரு இருந்தால்)
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
செய்முறை: மர அல்லது கண்ணாடி கிண்ணத்தில் (உலோக பாத்திரம் வேண்டாம்) அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும். ஒரு மென்மையான பேஸ்ட் போல வந்ததும், முகம் மற்றும் கழுத்தில் வட்ட இயக்கத்தில் தடவவும். கண்களைத் தவிர்த்து விடுங்கள். 20-25 நிமிடங்கள் அல்லது காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் மெதுவாக கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
வெயிலுக்கு உங்கள் சருமத்தை பாதுகாக்க, ரசாயனப் பொருட்களைத் தவிர்த்துவிட்டு, நம் பாரம்பரிய முறையான முல்தானி மட்டியை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான அழகையும், ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.