வெறும் 5 நிமிடம் போதும், இந்த சட்னி செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
10 வர மிளகாய்
10 பல் பூண்டு
3 தக்காளி
ஒரு துண்டு வெல்லம்
உப்பு
3 ஸ்பூன் நல்லெண்ணை
கடுகு
ஒரு கொத்து கருவேப்பிலை
செய்முறை : ஒரு மிக்ஸியில் வத்தல், பூண்டு, தக்காளி நறுக்கியது, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து, அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். 3 நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்கவும். சூப்பரான 5 நிமிட சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“