scorecardresearch

திருமணமாகி 5 மாதங்கள்! ராகவ் நக்ஷத்ரா செலிபிரேஷன்! வீடியோவை பாருங்க!

நக்ஷத்ரா நாகேஷ்-ராகவ் காதல் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இறுதியில் கோலாகலமாக நடந்தது.

Nakshathra Nagesh
5 months of being married Nakshathra Nagesh celebration Video viral

சென்னையில் பிறந்து வளர்ந்த நக்ஷத்ரா நாகேஷ், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷனில் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார்.

தந்தி டிவியில் ஒளிபரப்பான வானவில் நிகழ்ச்சி மூலம், நக்ஷ்த்திரா தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சன் டிவியின் சன் சிங்கர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் லைம்லைட்டிற்கு வந்தார். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் சீசன் 8 நடன நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் நக்ஷ்த்திரா இருந்தார்.

கானா காதல், இவள் அழகு, என் இனிய பொன் நிலாவே, ஏனோ வானிலை மாறுதே போன்ற பிரபலமான குறும்படங்களிலும், பாலாஜி மோகன் இயக்கிய அஸ் ஐம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்ற தமிழ் வெப்சீரிஸிலும் நக்ஷத்ரா நடித்தார்.

அதில் என் இனிய பொன் நிலாவே குறும்படத்தில் நடித்ததற்காக 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட நடிகைக்கான ’சைமா’ விருதை பெற்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமானார் நக்ஷ்த்திரா.  தொடர்ந்து, லஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், நாயகியாக நடிக்கிறார்.

நக்ஷ்த்திராவும், அவரது கணவர் ராகவும் ஒரே பள்ளியில் படித்தனர். ராகவ் நக்ஷத்ராவின் சீனியர். பள்ளியின் நாடககுழுவில் இருந்த போது, இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் காதல் அரும்பியது.

இதைத் தொடர்ந்து, நக்ஷத்ரா நாகேஷ்-ராகவ் காதல் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இறுதியில் கோலாகலமாக நடந்தது.

சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடந்தது. இதில் தமிழும், சரஸ்வதியில் சீரியலில் நடிக்கும் நக்ஷ்த்திரா நாகேஷ் மற்றும் தீபக் இருவருக்கும் சிறந்த ஆன் ஸ்கிரின் ஜோடிக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது தீபக் தனது மனைவியுடனும், நக்ஷ்த்திரா தனது கணவனுடனும் வந்து விருதுகளை வாங்கி மேடையை ஜமாய்த்தனர்.

நக்‌ஷ்த்திரா நாகேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

இந்நிலையில், திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆன நிலையில், நக்ஷ்த்திராவும், ராகவும் அந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நக்ஷ்த்திரா,  திருமணமாகி 5 மாதங்கள்!

ராகவ் நக்ஷத்ராவை மணந்தது மட்டுமல்ல, எங்கள் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டனர்!

இது நேர்மையாக என் வாழ்க்கையின் சிறந்த 5 மாதங்கள்

அழகான விளக்குகள், நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், உரையாடல்கள் மற்றும் மிகவும் நேர்த்தியான உணவுகளுடன் ஒரு சூப்பர் டின்னரை கொண்டாடினோம்! என்று பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: 5 months of being married nakshathra nagesh celebration video viral

Best of Express