/indian-express-tamil/media/media_files/Si8tT0PKlkCzXTGQsxg6.jpg)
ஈரானில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து பார்க்கலாம்.
ஈரான் நாட்டிற்கு, இந்தியர்கள் செல்ல விசா தேவையில்லை, இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுற்றி பார்க்கலாம். ஈரானில் இந்த 5 இடங்களை நீங்க தவறவிடாதீர்கள்.
ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணம் வரலாற்று ரீதியாக பழமை வாய்ந்தது. நக்ஷ்-இ ஜஹான் சதுக்கம் என்பது கட்டக்கலையில் அதிசயமாக கருத்தப்படுகிறது. உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இமாம் மசூதியின் அற்புதமான கட்டமைப்பு, ’Sheikh Lotfollah’ மசூதியின் கோபுர அமைப்பும் நம்மை வியக்க வைக்கும்.
மசாலா பொருட்கள், அழகிய வேலைபாடுகள் கொண்ட பொருட்கள் குவிந்து இருக்கும் வீதியை, நாம் பார்க்க முடியும்.
பெர்சப்பொலிஸ்
பாரசீகர்களின் நகரமாக இது விளங்குகிறது. அகாமனிசியப் பேரரசின் தலைநகரமாக இது இருந்தது. இதன் கல்லால் செய்யப்பட்ட வேலைபாடுகளை காணலாம். அருகில் உள்ள ’Naqsh-e Rustam necropolis’ என்ற தொல்லியல் தளத்தை சென்று பார்வையிட மறக்காதீர்கள். அகாமனிசியப் அரசர்களின் கல்லறை இங்கே உள்ளது.
கவிஞர்கள் மற்றும் நைட்டிங்கேல்ஸ் இருக்கும் நகரம் என்று அறியப்படும் ஷிரஸ் ( Shiraz) வரலாற்று சிறப்புமிக்க இடம், இங்கு பல்வேறு வகையான கலாச்சாரமும் உள்ளது.’ Nasir al-Mulk Mosque’ என்று அழைப்படும் மசூதியை நாம் கண்டு ரசிக்க முடியும். இந்த மசூதியின் ஜன்னல்கள் கலிடோஸ்கோபிக் வகைமாதிரிக்கு பெயர் போனது.
இயாஸ்த் , ஈரானின் பாலைவனப் பகுதியான இது பலவேறு தொல்லியல் இடங்களை கொண்டது. பிரபலமான ஜமேஷ் மசூதியை( Jameh Mosque) நீங்கள் காணலாம். இந்த மசூதியில் அற்புதமான இஸ்லாமிய கலைநயம் மற்றும் கட்டக்கலையை காணலாம்.
காஸ்பியன் கடலின் அழகை பார்க்க மறக்க வேண்டாம். பல்வேறு தண்ணீரில் இருக்கும் இடங்களை பார்வையிடலாம். கடலோர நகரங்களான அன்சலி மற்றும் ரம்சரை பார்வையிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.