வெள்ளரி, வேப்பிலை… கரப்பான் பூச்சியை விரட்ட 5 ஈசி வழிகள்!

கரப்பான் பூச்சியை விரட்டிட வெறு எந்த சாதனங்களும் புதுசாக வேண்டாம். ஈஸியாக சில சமையல் பொருள்களை வைத்து விரட்டிடலாம். அதனை இச்செய்தி தொகுப்பில் பாருங்கள்

எப்போதாவது சமையலறையில் சமையல் செய்து முடித்ததும், கரப்பான் பூச்சிகள் உலாவுவதை பார்த்தது உண்டா. கரப்பான் பூச்சிகள் சமையலறையில் இருப்பதை பார்க்கவே அருவெறுப்பும் அச்சமும் உண்டாகும்.தினமும் சமைலறையை கிளின் செய்கையில், இந்த கரப்பான் பூச்சி எப்படி வருகிறது என யோசித்தது உண்டா.

கிச்சனை தண்ணீர் ஊற்றி கிளின் செய்கையில், இந்த கரப்பான் பூச்சிகள் சிங்க் அடியிலும், ஸ்லாப் அடியிலும் சென்று மறைந்துவிடும். இரவுநேரத்தில் லைட் அனைத்ததும் அதன் வேலையை காட்டத்தொடங்கிடும்.

அப்படியான் கரப்பான் பூச்சியை விரட்டிட வெறு எந்த சாதனங்களும் புதுசாக வேண்டாம். ஈஸியாக சில சமையல் பொருள்களை வைத்து விரட்டிடலாம். அதனை இச்செய்தி தொகுப்பில் பாருங்கள்

சூடான தண்ணீரும், வினிகரும்

இது கரப்பான் பூச்சியை விரட்டும் ஈஸியான வழி. சூடான தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் லைட்டாக ஓயிட் வினிகரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர், அந்த தண்ணீரை கொண்டு அனைத்து ஸ்லாப்களைத் துடைத்தெடுக்க வேண்டும்.

இறுதியாக, அதனை சிங்க்கில் ஊற்றிவிட வேண்டும். இது குழாய்களில் கிருமி நீக்கம் செய்து, சமையலறைக்குள் அதன் வழியாக கரப்பான் பூச்சிகள் வருவதை தடுக்கிறது.

சூடான எலுமிச்சை தண்ணீர், பேக்கிங் சோடா

1 லிட்டர் வெந்நீரில் 1 எலுமிச்சை, 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து, நன்றாக கலக்க வேண்டும். அதனை சிங்க் தண்ணீர் ட்ரெயின் ஆகும் இடத்தில் ஊற்ற வேண்டும். மேலும், இதனை சிங்க் கீழேயும் மற்றும் ஸ்லெப்களில் ஊற்றி துடைக்க வேண்டும். இது, கரப்பான் பூச்சியின் நடமாட்டத்தை தடுத்திட உதவும்.

போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரை

இந்த பழமையான வழிமுறையும், சிறந்த தீர்வை வழங்கிறது. சிறிது போரிக் அமிலம் மற்றும் சர்க்கரையை கலந்து, பின்னர் கரப்பான் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் அதனை தெளிக்க வேண்டும். சர்க்கரை பூச்சிகளை ஈர்க்கும் போது, போரிக் அமிலம் உடனடியாக கரப்பான் பூச்சிகளை கொல்கிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் இந்தப் ஹேக்கை முயற்சியுங்கள்.

வெள்ளரிகாய்

வெள்ளரிகாயின் சாரமும் நறுமணமும் கரப்பான் பூச்சிகள் பிடிக்காது என்பது உங்களுக்கு தெரியுமா. கரப்பான் பூச்சிகள் உலாவும் இடங்களைச் சுற்றி சில வெள்ளரிகாய் துண்டுகளை வைத்தால் போதும், உங்கள் சமைலறை பக்கம் கரப்பான் பூச்சிகள் வராது.

வேம்பு சாறுகள்

வேப்ப இலைகள் முதல் வேப்ப எண்ணெய் வரை, உங்கள் சமையலறையிலிருந்து கரப்பான் பூச்சியை விரட்டுவதில் சூப்பராக வேலை செய்கிறது. ஒரு சில வேப்ப இலைகளை சமையலறையில் வைத்தால், 3 நாட்களில் மாற்றத்தை நீங்கள் காணலாம். சமையலறையில் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க, வெந்நீரில் சிறிது வேப்ப எண்ணெயை தெளிக்கலாம்.

இந்த 5 முறைகளும் ட்ரை செய்து பாருங்கள், கரப்பான் பூச்சியை நிச்சயம் உங்கள் சமையலறை விட்டு விரட்டிவிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 5 remedies to remove cockroach from kitchen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com