நமது சிறுநீரகத்தை ஆரோகியமாக வைத்துக்கொள்ள, ஒரு வழிமுறை என்றில்லை. மேலும் இதை செய்ய எந்த மந்திரமும் இல்லை, நாம் சில உணவுகளை தொடர்ந்து எடுத்துகொள்ளவும்.
ப்ளுபெரிஸ்
இதில் மினரஸ், ஆண்டி ஆக்ஸிண்டான, ஆன்தோசையனின்ஸ் உள்ளது. இவை வீக்கத்தை குறைக்கும். இதில் குறைந்த சோடியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ் உள்ளது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துகொள்ள முடியும். இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரக கல் ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
சால்மன்
இந்த பேட்டி மீன்களில், ஒமேகா 3 பேட்டி ஆசிட்ஸ், வீக்கத்திற்கு எதிரான பண்புகள், உள்ளதால், இதய ரத்த குழாய்களை ஆரோகியமாக்கும். இதில் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளதால், சிறுநீரகத்தை பாதிக்கும் நோய்கள் ஏற்படாது. இது சிறந்த புரத சத்து உள்ளதாகவும், தேவையான அமினோ ஆசிட் கொடுக்கிறது, இதனால் நமது சதையின் செயல்பாடுக்கு உதவுகிறது.
பூண்டு
இதில் அசிலின் உள்ளது. இது பேக்ட்ரீயாவிற்கும், வீக்கத்திற்கு எதிராக உள்ளது. இதை நாம் சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் குறையும், இதய நோய் ஏற்படாது. இதனால் சிறுநீரகம் பாதுகாப்பாக இருக்கும்.
குயினோவா
இதில் அதிக புரத சத்து, இரும்பு சத்து, மெக்னீஷியம் உள்ளது. இதில் குறைந்த அளவில் பொட்டாஷியம், பாஸ்பரஸ் உள்ளது. இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துகொள்ளலாம். இது ரத்த சர்க்கரையை சீராக்கும். ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“