இந்த 4 சூப்பர் உணவுகள் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். குறிப்பாக இந்த உணவில் சரியான அளவில் சத்துகள், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
இதில் உள்ள நார்சத்து அதிகம் பசி எடுக்காமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துகொள்ளும். மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ளது. மேலும் இது பசியை கட்டுப்படுத்தும். இந்நிலையில் அந்த உணவுகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
அவகடோ : இதில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, நார்சத்து உள்ளது. இது நமது அதிகபடியான பசியை கட்டுப்படுத்தும். இதனால் நீங்கள் ஒட்டுமொத்தமாக குறைவாக கலோரிகளை எடுத்துகொள்வீர்கள்.
குயினோவா: இதில் அதிக அளவு புரத சத்து உள்ளது. இதில் 9 அமினோ ஆசிட் உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு நார்சத்து ஒரு நாள் முழுவதும் உங்களை அதிகம் சாப்பிட்டதுபோல் நிறைவாக வைத்திருக்கும்.
சியா விதைகள் இதில் அதிக நார்சத்து மற்றும் ஒமேகா- 3 பேட்டி ஆசிட் உள்ளது. இதை சாப்பிடும்போது, இது தண்ணீரை உள்வாங்கிக்கொண்டு, நமது வயிற்றில் விரிவடைவதால் அதிகம் பசி எடுக்காது.
கிரீன் டீ : இதில் கடிசென்ஸ், கஃபைன் உள்ளது. இது உடல் இயக்கத்தை அதிகப்படுத்தி, உடலில் கொழுப்பு சத்தை உடல் பயிற்சியின் போது எரிக்க உதவும். இதனால் உடல் எடை குறையும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“