/indian-express-tamil/media/media_files/2025/06/19/6-6-6-there-are-3-walking-rules-f-2025-06-19-12-46-37.jpg)
6-6-6 வாக்கிங் ரூல்ஸ் 3 இருக்கு; உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் அருண்குமார்
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், உடல் செயல்பாடுகள் இல்லாததாலும், எடை அதிகரிப்பு பிரச்னை பொதுவானதாகிவிட்டது. எடை அதிகரிக்க அதிக நேரம் எடுக்காது, ஆனால் அதை இழப்பது மிகவும் கடினம். இதற்காக, மக்கள் ஜிம்மிற்குச் செல்கிறார்கள். அவர்கள் மணிக்கணக்கில் வியர்வை சிந்துகிறார்கள். இது அவர்களின் பாக்கெட்டையும் பாதிக்கிறது.
இதுதவிர, அவர்கள் பல வகையான உணவு முறைகளையும் பின்பற்றுகிறார்கள். இதுவும் ஒரு ஆரோக்கியமான முறையாகும். ஏனென்றால் நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடும்போது, உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. மேலும், நீங்கள் பல நோய்களிலிருந்து விலகி இருக்கிறீர்கள். எடை இழப்பு என்று வந்தால், நடைபயிற்சி ஒரு சிறந்த முறையாக இருக்கலாம். இருப்பினும், இப்போது நடைபயிற்சிக்கு பல வழிகள் உள்ளன.
விறுவிறுப்பான நடைபயிற்சி, பவர் வாக்கிங், டிரெயில், மைக்ரோ வாக்கிங் போன்ற பல நடைகள் அடங்கும். அந்த நடைகளில் ஒன்று 6-6-6. இது சமீபத்திய நாட்களில் விவாதிக்கப்பட்ட நடை விதி. எடையைக் குறைப்பதில் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் விரைவாக எடையைக் குறைக்க விரும்பினால், நிச்சயமாக 6-6-6 நடைபயிற்சி விதியை ஏற்றுக்கொள்ளுங்கள். சில நாட்களில் வித்தியாசத்தை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த விதியைப் பற்றி மருத்துவர் அருண்குமார் கூறிய தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் சேனலில் (Doctor Arunkumar) மருத்துவ ஆலோசனைகளையும் உடல் நலன் சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் உள்ள 6-6-6 நடைபயிற்சி முறை குறித்து டாக்டர் அருண்குமார் கூறுகையில், “இன்ஸ்டாகிராமில் தற்போது 6-6-6 என்ற ஒன்று டிரெண்டிங்கில் உள்ளது. அது என்ன 6-6-6 என்று தேடினால், 3 விதமான விளக்கங்களைக் கூறுகிறார்கள்.
அதாவது 6-6-6 என்பதற்கான முதல் விளக்கம், “தினமும் 60 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும். 60 நிமிடம் நடை பயிற்சிக்கு முன்னாடியும் பின்னாடியும் 6 நிமிடம் வார்ம் அப் செய்ய வேண்டும். வாரத்துக்கு 6 நாள் இந்த நடைபயிற்சியை செய்ய வேண்டும்.
6-6-6 என்பதற்கான இரண்டாவது விளக்கம், “வாரத்துக்கு 6 நாள் நடக்க வேண்டும், ஒரு நாளைக்கு 6 கி.மீ நடக்க வேண்டும், ஒரு மணி நேரத்துக்கு 6 கி.மீ வேகத்தில் நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 6-6-6 என்பதற்கான மூன்றாவது விளக்கம், “ஒரு நாளைக்கு 6 முறை நடக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் 6 நிமிடம் நடக்க வேண்டும், அப்புறம், இதே மாதிரி வாரத்துக்கு 6 நாள் நடக்க வேண்டும்.
6-6-6 என்பதற்கான மூன்று விளக்கங்களுமே நடைபயிற்சியை வலியுறுத்துகின்றன. நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கும் அவசியம். ஆனால், இதில் மூன்றாவது விளக்கம் பொருத்தமானதாகவும் எளிதாகவும் இருக்கிறது. இதை ஃபாலோ செய்து, இந்த 6-6-6 நடைபயிற்சியை செய்யலாம்” என்று டாக்டர் அருண்குமார் ஆலோசனை கூறுகிறார். இந்த முறை உடலில் கலோரிகள் எரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலை ஃபிட்டாக வைத்திருக்கவும் உதவக்கூடும். இது ஒரு எளிமையான முறை என்பதால், யார் வேண்டுமானாலும் இதை பின்பற்றலாம் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.