நடை பயிற்சியில் 6- 6- 6 நடைமுறை; இது சூப்பரா இருக்கு: மருத்துவர் அருண்குமார்

6- 6- 6 நடை பயிற்சி என்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதன் முக்கியத்துவம் மற்றும் விளக்கம் குறித்து மருத்துவர் அருண்குமார் விவரித்துள்ளார். நடை பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூட இதில் மிக எளிதாக செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

6- 6- 6 நடை பயிற்சி என்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதன் முக்கியத்துவம் மற்றும் விளக்கம் குறித்து மருத்துவர் அருண்குமார் விவரித்துள்ளார். நடை பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூட இதில் மிக எளிதாக செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Walking (1)

நடை பயிற்சி மேற்கொள்வது சற்று எளிமையானது என மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், பலருக்கு இதற்கான நேரம் இருக்காது. இந்நிலையில், 6- 6- 6 என்ற நடைமுறை, நடை பயிற்சியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்து மருத்துவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார்.

Advertisment

இது மூன்று வகைகளாக பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 60 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டுமனவும், நடை பயிற்சிக்கு முன்பும் பின்பும் வார்ம் அப் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையில், வாரத்தில் 6 நாள்கள், 6 கிலோமீட்டர், 6 கி.மீ வேகத்தில் நடை பயிற்சி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, ஒரு நாளைக்கு 6 முறை நடக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் 6 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் மற்ற இரண்டு முறைகளுக்கு நேரம் அதிகமாக தேவைப்படும் நிலையில், மூன்றாவது முறையில் அவ்வளவு நேரம் தேவை இல்லை என்பதால் எல்லோராலும் எளிதாக செய்ய முடியும் என்று மருத்துவர் அருண்குமார் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Best health benefits of walking everyday

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: