நிறம் மாறும் 7 வியத்தகு உயிரினங்கள்: ஏன் நிறம் மாறுகின்றன? மர்மமும் அறிவியலும்!

நிறம் மாறும் விலங்குகள் உடல் வெப்பநிலையைச் சீராக்கவும், இணையைக் கவரவும் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. நிறம் மாறும் 7 வியத்தகு உயிரினங்களும், அவற்றின் நிற மாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியலும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

நிறம் மாறும் விலங்குகள் உடல் வெப்பநிலையைச் சீராக்கவும், இணையைக் கவரவும் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. நிறம் மாறும் 7 வியத்தகு உயிரினங்களும், அவற்றின் நிற மாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியலும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
7 creatures

நிறம் மாறும் 7 வியத்தகு உயிரினங்கள்... ஏன் நிறம் மாறுகின்றன? மர்மமும் அறிவியலும்!

ர் வாழ சூழலோடு ஒன்றிப்போவது சிறந்த உத்தியாக இருக்கலாம். ஆனால் நிறம் மாறும் விலங்குகள் மறைவதற்காக மட்டுமல்லாமல், தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், உடல் வெப்பநிலையைச் சீராக்கவும், இணையைக் கவரவும் கூட தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. நிறம் மாறும் 7 வியத்தகு உயிரினங்களும், அவற்றின் நிற மாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியலும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

நண்டு சிலந்திகள்: மலர்ச் சிலந்திகள் என்றழைக்கப்படும் நண்டு சிலந்திகள், மலர்களில் இரையைப் பிடிப்பதற்காகக் காத்திருக்கும்போது தங்களை மறைத்துக்கொள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை. WIRED  என்ற பத்திரிகையின்படி, நிற மாற்றம் அவற்றின் வேட்டையாடும் வெற்றிக்கு அவசியமாக உதவுவதில்லை. அவற்றின் இந்த நிற மாற்றத்திற்கான உண்மையான காரணம் முழுமையாக அறியப்படவில்லை என்றாலும், பதுங்கியிருந்து தாக்குவதைத் தாண்டி பல நோக்கங்களுக்காக இது இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: 7 creatures that change colour; here’s why they do it

சியானியா ஆக்டோபஸ்: இந்த ஆக்டோபஸ் உருமாறுவதில் கில்லாடி. நிறமிகள் (chromatophores) எனப்படும் சிறப்பு தோல் செல்களைப் பயன்படுத்தி, தன் சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து போவதற்கும், எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கும் அல்லது தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அதிவேகமாக நிறத்தை மாற்றிக்கொள்ளும். நேஷனல் ஜியோகிராஃபிக் தகவலின்படி, இந்த மாற்றங்கள் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால், ஆக்டோபஸ் தன் சுற்றுப்புறங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்ற முடிகிறது.

கணவாய் மீன்: கடலில் நிறம் மாறும் உயிரினங்களிலே கணவாய் மீன்கள் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்தவை. நேஷனல் ஜியோகிராஃபிக் தகவலின்படி, கணவாய் மீன்களும் நிறமிகளைப் (chromatophores) பயன்படுத்தி தங்கள் நிறத்தையும் உடல் மேற்பரப்பின் தன்மையையும் அதிவேகமாக மாற்றிக்கொள்ளும். வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், முழு இருட்டிலும்கூட இவற்றால் இதைச் செய்ய முடியும். தம்மைச் சுற்றியுள்ளவற்றின் நிறம், ஒளி வேறுபாடு மற்றும் மேற்பரப்புத் தன்மையை அப்படியே செய்வதன் மூலம், எதிரிகளிடமிருந்து தப்பித்து, ஏமாறும் இரையைப் பிடிக்கின்றன.

பச்சோந்தி

WIRED இதழின்படி, பச்சோந்திகள் பொதுவாக நம்பப்படுவதற்கு மாறாக, தம்மை மறைத்துக் கொள்வதற்காக நிறம் மாறுவதில்லை. மாறாக, அவை தங்கள் உடல் வெப்பநிலையைச் சீராக்கவும், தங்களுக்குள் தொடர்பு கொள்ளவுமே நிறம்மாறுகின்றன. வெப்பத்தை உறிஞ்சவோ அல்லது எதிரொலிக்கவோ தங்கள் தோல் நிறமிகளை அவை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இது உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்ற பச்சோந்திகளுக்கு செய்திகளைத் தெரிவிக்கின்றன. இது இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருப்பதையோ குறிக்கக்கூடும்.

பொன்னிற ஆமை வண்டு: இந்த பளபளப்பான வண்டு, அச்சுறுத்தலை உணரும்போது, நொடிகளில் பளபளக்கும் பொன்னிறத்திலிருந்து மந்தமான பழுப்பு அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறும். வண்டின் இறக்கைகளின் மேலுள்ள உறைகளில் உள்ள திரவத்தில் ஏற்படும் மாற்றங்களால் இந்த நிறமாற்றம் நிகழ்கிறது. இது, ஒளி அவை மீது பட்டு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை மாற்றுகிறது. இந்த திடீர் உருமாற்றம். வண்டு நச்சுத்தன்மை உடையது அல்லது உண்பதற்கு தகுதியற்றது என்று குறிப்புணர்த்துவதன் மூலம் எதிரிகளை தடுக்கக்கூடும்.

பசிபிக் மரத் தவளை: இந்த சிறிய இருவாழ்விகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்திற்கும் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கும் சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ மாறக்கூடியவை. Earth.com தளத்தின்படி, வெவ்வேறு பின்னணி நிறங்கள், வெளிச்ச அளவு மற்றும் வெப்ப நிலைகளுக்கு ஏற்ப இவை தம்மை மாற்றிக்கொள்ளும் திறன், தங்களை மறைத்துக் கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் உதவுகிறது. 

ஃபிளண்டர் மீன்கள்: இந்த தட்டை மீன்கள் கடலடித் தளத்தின் பச்சோந்திகளாகும். இவை நிறமிகளைப் (chromatophores) பயன்படுத்தி மணல், பாறைகள் அல்லது பவளப்பாறைகளுக்கு ஏற்ப தங்கள் தோலின் நிறத்தையும் வடிவமைப்பையும் அதிவேகமாக மாற்றியமைத்துக் கொள்ளும். இந்த உருமறைப்பு, எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், வியக்கத்தக்க திறமையுடன் இரையைப் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் உதவுகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: