திருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்!

ஏழுமலையான் சிலையில் இருந்து கழட்டப்படும் அணிகலன்கள் எப்போதுமே சூடாகவே இருக்கும்.

7 Interesting Facts about Tirupati Temple : இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் அறியப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக்கும் வெங்கடேசன். பெருமாள், திருமால் என்று பக்தகோடிகளால் வணங்கப்படும் திருப்பதி கோவில் பற்றி நீங்கள் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக இங்கே!

ரகசிய ஊர்

பாலாஜிக்கு தேவையான அனைத்து அபிசேக பொருட்களும் இது நாள் வரைக்கும் யாருக்குமே சொல்லப்படாத கிராமத்தில் இருந்து தான் வருது. பூ, பால், பழம், நெய், மோர், துளசி எல்லாமே அங்க இருந்து தான் வருது. ஆனால் வெளியில் இருந்து அந்த ஊருக்கு யாரும் போகவும் முடியாது. அனுமதியும் இல்லை. திருப்பதியில் இருந்து வெறும் 20 கி.மீ.ல் தான் அந்த ரகசிய கிராமம் இருக்கது.

கருவறை

கோயிலோட கருவறைல சிலையை வைத்து வழிபடுவது தான் ஐதீகம். ஆனா இந்த கோவில்ல இருக்குற திருப்பதி கருவறைக்கு வலது புறமா இருந்து தரிசனம் தருவாரு

திருப்பதி மொட்டைக்கு ஏன் ஃபேமஸ்?

திருப்பதி அவருடைய இளமை காலத்தில் மிகவும் அழகாவும், அதே நேரத்தில் நீண்ட அழகான தலைமுடியை கொண்ட கடவுளாகவும் இருந்திருக்கின்றார். பூமிக்கு வந்த கொஞ்ச நாளல்ல அவருக்கு கொஞ்சம் முடி கொட்ட ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட அவரின் பக்தை
காந்தர்வ இளவரசி நீல தேவி தன்னுடைய தலைமுடியை கொஞ்சம் வெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட திருமால், தன்னுடைய வரம் வேண்டி, திருப்பதி ஸ்தலத்தில் வந்து மொட்டியிட்டு வேண்டிக் கொள்பவர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவேன்” அப்டின்னு சொல்லியிருக்காரு. லட்டுக்கு மட்டும் இல்லாம மொட்டைக்கும் ஃபேமஸான இடம் தான் திருப்பதி.

விடாது ஒலிக்கும் அலைச்சத்தம்

கடவுளின் கர்பகிரகத்தில் நிற்காமல் நீண்டு நீண்டு ஒலிக்கும் கடல் அலைகள் என்பது பல ஆண்டுகளாக பக்தர்களாலும் மக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.

அணையவே அணையாத விளக்கு

கடவுளின் முன்னால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே தான் இருக்கும். இந்த விளக்குகளை எப்போது யார் ஏற்றினார்கல் என்பது இது வரை யாருக்கும் தெரியாது.

சிலை

திருப்பதி ஏழுமலையான் சிலையின் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்குமாம். ஏன் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள், அந்த இடத்தினை ஈரமின்றி வைத்திருப்பதையே ஒரு வேளையாக வைத்திருக்கின்றார்கள்.

மேலும் படிக்க : குடும்பத்துடன் திருப்பதி செல்கிறீர்களா? இந்த முக்கிய தகவலை தெரிஞ்சிட்டு போங்க அப்புறம் ஃபீல் பண்ணாதீங்க!

சூடாகவே இருக்கும் அணிகலன்கள்

பெருமாளின் கழுத்தில் அணி்விக்கப்படும் நகைகள் மற்றும் ஆபரணங்களை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சுத்தம் செய்வதற்காக கழற்றுவது வழக்கம். அப்படி சிலையில் கழுத்தில் இருந்தும், இதர பகுதிகளில் இருந்தும் கழட்டப்படும் அணிகலன்கள் எப்போதுமே சூடாகவே இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close