தேவையான பொருட்கள்
சேனை கிழங்கு - கால் கிலோ
வெள்ளரிக்காய் – கால் கிலோ
செள செள- கால் கிலோ
பூசணிக்காய்- கால் கிலோ
¼ கப் வேர்கடலை ஊறவைத்தது
துவரம் பருப்பு ½ கப்
2.5 கப் தண்ணீர்
1/8 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை
2 ஸ்பூன் கொத்தமல்லி பொடி
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
5 முதல் 6 வத்தல்
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவியது
எலுமிச்சை அளவு புளி
அரை ஸ்பூன் கடுகு
1 கொத்து கருவேப்பிலை
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
செய்முறை: காய்கறிகள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். இதை குக்கரில் சேர்க்கவும். தொடர்ந்து இதில் துவரைம் பருப்பு, வேர்கடலை ஊறியது, தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்த்து, கொத்தமல்லி பொடி, கடலை பருப்பு, வத்தல், தேங்காய் துருவியதை சேர்த்து வறுத்து கொள்ளவும். இதை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். புளியில் வெந்நீர் சேர்த்து, தண்ணீர் எடுத்து கொள்ளவும். மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் புளி தண்ணீர், அவித்த காய்கறிகள் சேர்த்து கிளரவும். அரைத்த பேஸ்டை சேர்த்து கிளரவும், உப்பு சேர்த்துகொள்ளவும். செம்ம சுவையான கூட்டு ரெடி .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“