காய்கறிகளை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுறீங்களா? தப்பு பண்றீங்க மக்களே!

சமையல் என்பது வெறும் சுவைக்காக அல்ல, ஆரோக்கியத்திற்காகவும். சிறிய மாற்றங்கள் – காய்கறி நறுக்கும் முறை முதல் உப்பு சேர்ப்பது வரை – எல்லாமே உங்கள் உடல்நலத்தையும் உணவின் தரத்தையும் மேம்படுத்தும்.

சமையல் என்பது வெறும் சுவைக்காக அல்ல, ஆரோக்கியத்திற்காகவும். சிறிய மாற்றங்கள் – காய்கறி நறுக்கும் முறை முதல் உப்பு சேர்ப்பது வரை – எல்லாமே உங்கள் உடல்நலத்தையும் உணவின் தரத்தையும் மேம்படுத்தும்.

author-image
Mona Pachake
New Update
download (46)

சமையல் என்பது ஒரு கலை மட்டுமல்ல, ஒரு நுண்ணறிவும் கூட. நேரத்தைச் சேமித்து, ஆரோக்கியமான உணவைப் பெற பல சிறிய மாற்றங்கள் பெரிய பலனை அளிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். “சமையலறையில் சிறிய பழக்கங்கள் கூட உங்கள் உடல்நலத்தையும் உணவுப் பழக்கங்களையும் மேம்படுத்தும்,” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிரண் குக்ரேஜா (Kiran Kukreja). சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவசியமாக கடைபிடிக்க வேண்டிய சில சமையல் வழிமுறைகளை அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisment

1. பருப்பு மற்றும் பருப்புவகைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்

பருப்பு, பட்டாணி, வேர்க்கடலை, பாதாம் போன்றவற்றை இரவு முழுவதும் ஊறவைத்தால், அவை சமைக்கும் நேரத்தை குறைப்பதுடன், ஜீரணத்திற்கும் உதவுகிறது. மேலும், ஊட்டச்சத்துக்கள் உடலில் எளிதாக உறிஞ்சப்பட உதவுகிறது என்கிறார் கிரண்.

2. காய்கறிகளை நறுக்கிய பிறகு கழுவ வேண்டாம்

பலர் காய்கறிகளை நறுக்கி விட்டு பின்னர் தண்ணீரில் கழுவுவது வழக்கம். ஆனால், இதனால் காய்கறிகளில் உள்ள தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் (water-soluble vitamins) நீரில் கலந்து போகும். எனவே, காய்கறிகளை முதலில் நன்றாக கழுவி விட்டு அதன் பிறகு நறுக்க வேண்டும்.

3. காய்கறிகளை சிறிய துண்டுகளாக அல்லாமல் பெரிய துண்டுகளாக நறுக்கவும்

சிறிய துண்டுகளாக வெட்டினால், சமைக்கும் போது அதிக பரப்பளவு வெப்பத்துக்கும் தண்ணீருக்கும் வெளிப்படும். இதனால் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சமைக்கும் தண்ணீரில் கலந்து போகும் அபாயம் உள்ளது. பெரிய துண்டுகளாக வெட்டுவது இந்த ஊட்டச்சத்துக்கள் காக்க உதவுகிறது என கிரண் கூறுகிறார்.

Advertisment
Advertisements

4. பச்சை தேயிலை பைகளை (Green Tea Bags) கொதிக்கும் நீரில் வைக்க வேண்டாம்

சில பச்சை தேயிலை பைகள் நைலான் அல்லது பிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்டிருப்பதால், அதிக வெப்பத்தில் அவை மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியிடக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, வெப்பமான (கொதிக்காத) நீரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

5. அலுமினியம் ஃபாயிலுக்கு பதிலாக பார்ச்மெண்ட் பேப்பர் பயன்படுத்துங்கள்

கிளினிக்கல் டயட்டீஷன் கரிமா கோயல் (Garima Goyal) கூறுவதாவது, பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் ஃபாயிலுக்கு மாற்றாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இது உணவுடன் வேதியியல் மாற்றம் செய்யாது, அல்லது எந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் வெளியிடாது. இதன் வெப்பத்தைக் கையாளும் திறன் மற்றும் தண்ணீர் எதிர்ப்பு பண்புகள் இதை சமையல் மற்றும் பேக்கிங் ஆகியவற்றிற்கு சிறப்பாக ஆக்குகின்றன.

 6. ஹிங்க் (Asafoetida) – சிறிய அளவில் பெரிய நன்மைகள்

இந்திய சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஹிங்க், ஜீரணத்திற்கும், வாயு மற்றும் வீக்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. பருப்பு, பீன்ஸ், பூக்கோசு போன்ற உணவுகளால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க இது உதவுகிறது. மேலும், இதன் ஆண்டி-மைக்ரோபியல் பண்புகள் (anti-microbial properties) வயிற்று தொற்று ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கின்றன என கரிமா கோயல் கூறுகிறார்.

7. உப்பை இறுதியில் சேர்க்கவும்

சமைக்கும் ஆரம்பத்திலேயே உப்பு சேர்ப்பதை விட, இறுதியில் சேர்ப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். இது உப்பின் அளவை துல்லியமாக கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, சாப்பாடு குறைந்து கெட்டியாகும் உணவுகள் அல்லது ஏற்கனவே உப்பு உள்ள புளியசாறு, சூப் போன்றவற்றில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மொத்தத்தில், சமையல் என்பது வெறும் சுவைக்காக அல்ல, ஆரோக்கியத்திற்காகவும். சிறிய மாற்றங்கள் – காய்கறி நறுக்கும் முறை முதல் உப்பு சேர்ப்பது வரை – எல்லாமே உங்கள் உடல்நலத்தையும் உணவின் தரத்தையும் மேம்படுத்தும்.

சமையலறையில் சிறிய அறிவும், சிறிது கவனமும் இருந்தால், கண்ணீரின்றி சமைக்கலாம்; ஆரோக்கியமாக சாப்பிடலாம்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: