7000 விருந்தினர்கள்...50 குதிரைகள்.. லாலு மகனின் பிரம்மாண்ட கல்யாண பட்ஜெட் தெரியுமா?

இன்று நடைபெறவுள்ள லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் – ஜஸ்வர்யா திருமணம்  உணவில் தொடங்கி, விருந்தினர்கள் தங்குமிடம் வரை எல்லாமே பிரம்மாண்டமான முறையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் – ஐஸ்வர்யா ராயின் நிச்சயதார்த்தம்  பாட்னாவில் நடந்த முடிந்தது. ஐஸ்வர்யா  பிஹார் மாநிலத்தில் யாதவ் சமூகத்தில் இருந்து வந்த முதலாவது முதலமைச்சர் தராகோ ராயின் பேத்தி ஆவர்.

இவர்களின் திருமணம் பாட்னாவில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் மே 12 (இன்று) பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.   இன்னும் சில மணி நேரங்களில் திருமணம் நடைப்பெறவுள்ள நிலையில்,  திருமணத்திற்கு எவ்வளவு பிரம்மாண்டமான முறையில்  ஏற்பாடுகள் நடந்துள்ளன என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.  இரண்டு நாட்களுக்கு முன்பு, மகனின் கல்யாணத்தில் கலந்துக் கொள்ள ஊழல் வழக்கில் சிறை சென்ற  லாலு பிரசாத் 3 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.

கல்யாணத்தில்,  கலந்துக் கொள்ள இருக்கும் 7000 ஆயிரம் உறவினர்களுக்கு பாட்னாவில் உள்ள 5 நட்சத்திர  விடுதியில் உள்ள எல்லா அறைகளும் புக் செய்யப்பட்டுள்ளனர்.   மாப்பிளையுடன்  ஊர்வலத்தில்  நண்பர்களும் வலம் வர 50 குதிரைகள் பிரத்யேகமாக வர வைக்கப்பட்டுள்ளன.

 

சாப்பாட்டிற்கு பிரபல சமையல் கலைஞர் சரோஜ் யாதவ் புக் செய்யப்பட்டுள்ளார். 50 க்கும் மேற்பட்ட  டிஷ்கள்  விருந்திரனர்களுக்கு பரிமாறப்படவுள்ளது.  அத்துடன் திருமணத்தில் கலந்துக் கொள்ளும் விவிஐபிக்களுக்கு   தங்களுக்கு பிடித்தமான உணவை தேர்ந்தெடுத்த உண்பதற்கு 50 வகையான உணவு ஸ்டால்களும் போடப்பட்டுள்ளனர்.

தேஜ் பிரதாப் – ஐஸ்வர்யாவின் திருமணம் இப்படி தான் பிரம்மாண்டமாக நடைப்பெற வேண்டும் என்று ஜெயிலில் இருந்தப்படியே   லாலு தனது வழக்கறிஞர் மூலம் குடும்பத்தாரிடம் தெரிவித்தாராம்.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close