/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG_20220810_123709.jpg)
250 kilo cake made by Coimbatore college students
கோவையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களால் தயாரித்த 250 கிலோ எடை கொண்ட 76 சதுர அடி பரப்பளவு கேக் அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றியும், கல்வி நிறுவனங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG_20220810_123634.jpg)
இந்நிலையில் இந்த 75வது சுதந்திர தினவிழாவை வரவேற்க்கும் விதமாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவர்கள், சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 250கிலோ எடை கொண்ட 76 சதுர அடி பரப்பளவில், கேக் தயாரித்து அசத்தியுள்ளனர்.
இவர்களது இந்த கேக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும் கல்லூரி மாணவர்களின் இந்த சாதனையை பாராட்டி அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பாராட்டுகளையும் சான்றிதழ்களும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.