/indian-express-tamil/media/media_files/2025/06/01/51Nxomwj6A8LBiEdPw8T.jpg)
கண்ணாடி பெட்டிக்குள் யோகா: கோவை சிறுவர்கள் உலக சாதனை!
கோவை சரவணம்பட்டி பகுதியில் 8 முதல் 12 வயது வரையிலான 6 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 8 பேர் இணைந்து யோகாவில் புதிய சாதனை படைத்துள்ளனர். வெவ்வேறு சாதனைகளாக நடைபெற்ற இப்போட்டியில் சம்யுத்தா என்ற சிறுமி ஒன்றரை அடி பரப்பளவு கொண்ட கண்ணாடி தொட்டியில் லாவகமாக அமர்ந்தபடி கண்டபிடராசனா எனும் ஆசனத்தைத் தொடர்ந்து 12 நிமிடம் 36 விநாடிகள் செய்து அசத்தினார்.
தொடர்ந்து சிறுமிகள் சம்ரிதா, மேகா, அக்ஷரா, வர்ஷா, வேதா ஆகிய 5 சிறுமிகளும் 8 அடி உயர டவரின் மீது ஏறி பூமாசனாம், உஷ்டாரசனம், கோமுகாசனம், கபோடாசனம் மற்றும் வாமாதேவாசன என பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். இதே போல சிறுவர்கள் தஸ்வந்த் மற்றும் அஸ்வந்த் ஆகியோர் டவரின் மீது ஏறி யோகாவை செய்தனர். 8 சிறுவர் சிறுமிகள் இணைந்து செய்த இந்நிகழ்வு டி.சி.பி.உலக சாதனை பதிவாக பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து யோகா பயிற்சியாளர்கள் ரூபிகா,பவ்யஸ்ரீ ஆகியோர் கூறுகையில் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கிய தொடர் பயிற்சிகள் வாயிலாக இந்த சாதனையை செய்ய முடிந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து சாதனையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.