/indian-express-tamil/media/media_files/2025/10/13/download-40-2025-10-13-10-44-40.jpg)
நடப்பது என்பது ஒரு எளிமையான உடற்பயிற்சி என்றாலும், அதில் பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகையில், தற்போது மருத்துவ நிபுணர்களும் உடல்நல ஆலோசகர்களும் பரிந்துரை செய்து வரும் புதிய நடைபயிற்சி முறை தான் 'எட்டு வடிவ நடைபயிற்சி' ஆகும். இந்த நடைபயிற்சி, எண் 8 வடிவத்தை ஒத்த பாதையில் நடப்பதைக் குறிக்கிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் உடலின் பல பாகங்கள் இயக்கத்திற்கு வருவதால், முழுமையான உடற்பயிற்சி கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எட்டு வடிவ நடைபயிற்சியின் நன்மைகள்:
எடையை குறைக்கும்:
எட்டு வடிவில் நடைபயிற்சி செய்யும்போது உடலின் பல தசைகள் இயக்கத்துடன் ஈடுபடுவதால், கொழுப்பு எளிதில் கரைந்து, எடை குறைவதில் வேகமான மாற்றம் ஏற்படுகிறது. குறுகிய காலத்திலேயே எடையைக் குறைக்க விரும்புவோருக்கான சிறந்த தேர்வாக இது விளங்குகிறது.
பிபி கட்டுக்குள் இருக்கும்:
உயர்ந்த இரத்த அழுத்தம் (BP) உள்ளவர்கள் இந்த நடைபயிற்சியை தினசரி மேற்கொண்டால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய ஆரோக்கியமும் மேம்படும்.
தசைகள் வலுவடையும்:
இந்த நடைபயிற்சியில் இடது-வலமாக வளைந்து நடப்பதால், வயிறு மற்றும் தொடைப் பகுதியின் தசைகள் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால் தசைகள் வலிமை பெறும் மற்றும் உடல் உற்சாகத்துடன் இருக்கும்.
மன அழுத்தம் குறையும்:
இது போன்ற ஒருமுனை கவனத்துடன் செய்யும் நடைபயிற்சி, மனதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திருப்புகிறது. இதனால் மன அழுத்தம், பதட்டம் குறைந்து, நலம் பரவும்.
முழங்கால் வலிக்கு தீர்வு:
முழங்கால் வலி மற்றும் கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், இந்த எட்டு வடிவ நடைபயிற்சியை மேற்கொண்டால் முழங்காலில் ஏற்படும் அழுத்தம் குறைந்து, வலி தணிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படிச் செய்யலாம்?
நீங்கள் நடக்கும் பகுதி பரந்தும் சீராகவும் இருக்க வேண்டும். எண்ணிக்கை 8 வடிவில் படிப்படியாக நடக்க வேண்டும். தினமும் குறைந்தது 15 – 30 நிமிடங்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொண்டால், மெய்யும் மனமும் மெருகூறும்.
மொத்தத்தில், எட்டு வடிவ நடைபயிற்சி என்பது, இன்று வேலைச்சுமையால் மன அழுத்தம் அதிகம் அனுபவிக்கும் நபர்களுக்கு ஒரு எளிய தீர்வாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நல்ல ஆரம்பமாகவும் இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.