யூடியூப் பயன்படுத்தி 184 கோடி சம்பாதித்த 8 வயது சிறுவன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
8-year-old Ryan Kaji tops YouTube list of high earners with $26 million - யூடியூப் பயன்படுத்தி 184 கோடி சம்பாதித்த 8 வயது சிறுவன்

8-year-old Ryan Kaji tops YouTube list of high earners with $26 million - யூடியூப் பயன்படுத்தி 184 கோடி சம்பாதித்த 8 வயது சிறுவன்

உலகளவில் 'யூ டியூப்' சேனல் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி (Ryan Kaji) என்ற 8 வயது சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடியே 98 லட்சத்து 55 ஆயிரம்) சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

ரியானின் பெற்றோர் கடந்த 2015-ம் ஆண்டு 'ரியானின் உலகம்' என்ற பெயரில் யூ டியூப் சேனலை தொடங்கினர். சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகளை மதிப்பாய்வு செய்து ரியான் வீடியோக்களை வெளியிட்டு வருகிறான்.

Advertisment
Advertisements

தற்போது இந்த சேனலுக்கு 2 கோடியே 30 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். ரியானின் பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. ரியான் தற்போது சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனைகளையும் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.

முதல் 10 இடங்களைப் பிடித்தவ யூடியூபர்ஸ் பட்டியல்:

ரியான் காஜி - $26M

டியூட் ஃபெர்பெக்ட் - $20M

அனஸ்டாசியா ராட்சின்ஸ்கயா - $18M

ரெட் அன்ட் லிங்க் - $17.5M

ஜெஃப்ரீ ஸ்டார் - $17M

பிரெஸ்டன் - $14M

பிவ் டை பை - $13M

மார்கிப்ளையர் - $13M

டான்டிடிஎம் - $12M

வனோஸ் கேமிங் - $11.5M

அதே போல் ரஷியாவை சேர்ந்த 5 வயது சிறுமியான Anastasia Radzinskaya 18 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 128 கோடி) வருமானத்துடன் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் அறிக்கைப்படி, அவர் ஏழு சேனல்களில் 107 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார், மேலும் அவரது வீடியோக்கள் 42 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளன.

Youtube

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: