சிறுமி அனுப்பிரியா - வுக்கு சைக்கிள் கிடைச்சாச்சி - 8 years old donates small savings | Indian Express Tamil

சைக்கிள் முக்கியமல்ல..என் அண்டை மாநிலம் தான் எனக்கு முக்கியம்..உண்டியலை உடைத்த சிறுமி!

கேரள மக்கள் கண்ணீருடன் அழும் வீடியோக்கள் நாள்தோறும் செய்திகளிலும் சமூகவலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

சைக்கிள் முக்கியமல்ல..என் அண்டை மாநிலம் தான் எனக்கு முக்கியம்..உண்டியலை உடைத்த சிறுமி!
சிறுமி அனுப்பிரியா

வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரள மாநிலத்திற்கு தனது உண்டியலை உடைத்து ரூ. 9000 பணத்தை அனுப்பி வைத்த சிறுமி அனுப்பிரியாவுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சிறுமி அனுப்பிரியாவின் நெகிழ வைக்கும் செயல் :

இந்தியாவின் அண்டை மாநிலமான கேரளா  தற்போது வெள்ளத்தால் மிதந்து வருகிறது. வரலாறு காணாமல் பெய்த மழையால் கேரள மக்கள் உடைமகளை இழந்துள்ளனர்.  “வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. சாப்பிட கூட வழியில்லை.  ஏதாவது உதவுகள்” இப்படி கேரள மக்கள் கண்ணீருடன் அழும் வீடியோக்கள் நாள்தோறும் செய்திகளிலும் சமூகவலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த வீடியோக்களை, தனது குடும்பத்தினருடன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி தான் அனுப்பிரியா. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனுப்பிரியாவுக்கு 8 வயது.  அனுப்பிரியாவின் நீண்ட நாள் ஆசை சைக்கிள் வாங்க வேண்டும்.

இந்த ஆசையை பலமுறை தனது தந்தையிடம் கூறியுள்ளார் அவர். ஆனால்  பிரியாவின்  தந்தை  6 ஆம் வகுப்பு சென்ற பின்பு தான் சைக்கிள் வாங்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.  இதனால் அந்த சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக 5 உண்டியலை வாங்கி அதில் நாள்  தோறும் தனக்கு கிடைக்கும் பணத்தை சேமித்து வந்துள்ளார்.

சிறுமி அனுப்பிரியா
உண்டியலுடன் அனுப்பிரியா

இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு கேரள மக்களுக்கு நிதி உதவிக் கேட்டு தன்னார்வு அமைப்பினர் சிலர் சென்றுள்ளனர். இதைப் பார்த்த சிறுமி அனுப்பிரியா  ஆசை ஆசையாக உண்டியலில் சேர்ந்த பணத்தை உடைத்து அதில் இருந்து ரூ. 9000  கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்காக  கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த அவர்களின் குடும்பத்தார், அந்த சிறுமியிடம்  சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை  நிவாரண நிதிக்காக தந்து விட்டாய்? பிறகு எப்படி சைக்கிள் வாங்குவாய்? என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி “ சைக்கிள் முக்கியமில்லை வெள்ளத்தால் மிதக்கும் என் அண்டை மாநிலமான கேரளா தான் ,முக்கியம்” என்று தெரிப்புடன் பதில் கூறினார்.

அனுப்பிரியா குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவியது.  அவரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் தான், கேரளாவுக்கு உதவிய சிறுமி அனுப்பிரியாவின் உயர்ந்த செயலை பாராட்டிய ஹீரோ சைக்கிள் நிறுவனம், அச்சிறுமிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறத்து ஹூரோ சைக்கிள் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டதுடன், சிறுமியின் முகவரியும் கேட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: 8 years old donates small savings