கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் பயிலும் 96 வயது மாணவி கார்த்தியாயினி பற்றித்தான் தற்போது ஒட்டுமொத்த சமூகவலைத்தளத்திலும் பேச்சு.
கார்த்தியாயினி மூதாட்டி :
கல்வி பெற வயது என்றுமே ஒருதடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயினி. ஆலப்புழா பகுதியை சேர்ந்த இவர், அம்மாநிலத்தின் முதியவர்கள் கல்வியறிவு பெரும் திட்டம் ஒன்றில் படித்து வருகிறார்.
சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும், சரளமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பது தான் ஆசையாம். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் ஒருமுறை கூட பள்ளி பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தனது இளம் வயதில் தொடர முடியாத கல்வியை 96 வயதில் கற்க தொடங்கியுள்ளார் கார்த்தியாயினி.
முதியவர்கள் கல்வியறிவு பெரும் திட்டத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வரும் இவர்,சில தினங்களுக்கு முன்பு முதன்முறையாக நான்காம் வகுப்பு தேர்வு எழுதினார். அந்த தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற அனைவரையும் அசர வைத்துள்ளார்.
கார்த்தியாயினி தேர்வு எழுதும் காட்சி
100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், வாசிப்பிற்கு 30 மதிப்பெண்களும், மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண்களும், கணக்கு பாடத்திற்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.ன் வாழ்நாளில் முதல் தேர்வை எழுதிய கார்த்தியாயினி வாசிப்பு பகுதியில் 30/30 என முழுமதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதே போல் தேர்வு அறையில் அவருக்கு வினாத்தாள அளிக்கப்பட்டவுடன், மாணவி கார்த்தியாயினி விறுவிறுப்பாக அனைத்து கேள்விகளுக்கு பதில் எழுத தொடங்கியுள்ளார். அப்போது அவரின் அருகில் இருந்த சக மாணவனா 74 வயது முதியவர், கார்த்தியாயினின் விடைத்தாளை எட்டிப் பார்த்துள்ளார்.
இதைப்பார்த்த கார்த்தியாயினி அங்கிருந்த ஆசிரியரிடம் இதுப் பற்றி புகார் அளித்துள்ளார். அவரை வகுப்பு ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கார்த்தியாயினி தேர்வு எழுதிய செய்திகள் ஒளிப்பரப்பட்டன. அடுத்த நாள் முதலே அவர் பிரபலமாகி விட்டார். சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவுகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர்.