கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருபாசினி. பட்டயப்படிப்பு முடித்துள்ள இவர் பள்ளி பருவத்தில் இருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். சிறு வயதிலேயே தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழி கற்றுள்ளார்.
இந்நிலையில் இவரின் மொழி ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர் பல்வேறு மொழிகளை கற்க உற்சாகப் படுத்தியுள்ளனர். இதனையடுத்து கிருபாசினி படிப்படியாக பல்வேறு மொழிகள் கற்க ஆர்வம் செலுத்தி கற்றுக்கொண்டு வந்துள்ளார். மொழிகள் கற்றுக் கொள்வதற்காக பல மாநிலங்கள் நாடுகள் சென்று பயிற்சியை பெற்று வந்துள்ள இவர் ஒரு மொழியை முழுமையாக கற்று கொள்ள 3 மாதங்களே ஆகும் என்கிறார்.

தற்போது 15 மொழிகள் பேசி, எழுதி, முறையாக உச்சரித்து வருகிறார். மேலும் பல்வேறு மொழிகள் கற்க விரும்பும் குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுகொடுத்து வருகிறார். 30 வயதிற்குள் 20 மொழிகள் கற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் கிருபாசினிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை