/indian-express-tamil/media/media_files/2025/08/18/kambam-meena-2-2025-08-18-19-23-51.jpg)
ரொம்ப ஸ்பெஷல் அவார்ட் இதுதான்.. பாக்கியலெட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனா ஹோம் டூர் வைரல்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாக்கியலட்சுமி சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் கம்பம் மீனா. இவர், இதற்கு முன்னர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகியது.
இதுவரை 75 படங்களுக்கு மேல் கம்பம் மீனா நடித்துள்ளார். ஆனால், இவரை பற்றி பலருக்கும் தெரியாது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கஸ்தூரி அத்தாச்சியாக நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். இது தவிர இவர் பிற சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில், Reflect Lifestyle என்ற யூடியூப் சேனலில் ஹோம் டூர் வீடியோவில் பேசிய கம்பம் மீனா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடிப்புப் பயணம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
வீட்டின் நுழைவு வாயிலில், பெரிதாக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் முதலில் வரவேற்கிறது. அங்கே அமர்ந்துதான் தனது மகிழ்ச்சியான நேரங்களைக் கழிப்பதாக கம்பம் மீனா தெரிவித்தார். ஒரு நடிகையாக இருந்தாலும், ஒரு சராசரி இல்லத்தரசியாக தனது குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தைச் செலவழிப்பதை அவர் மிகவும் விரும்புவதாக இந்த வீடு முழுவதும் பிரதிபலித்தது.
வீட்டின் ஒரு மூலையில், அவர் பெற்ற விருதுகள் அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு விருதுக்கும் பின்னால் உள்ள உழைப்பையும், அன்பையும் அவர் நினைவுகூர்ந்தார். குறிப்பாக, விஜய் டிவி விருதுகள் தனக்கு மிகவும் நெருக்கமானவை என்றும், பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் மூலம் தனக்கு கிடைத்த அங்கீகாரமும் அன்பும் அளவிட முடியாதவை என்றும் அவர் மனம் உருகிப் பேசினார்.
மீனா தனது குடும்பத்தினருடன் உணவருந்தும்போது டைனிங் டேபிளைப் பயன்படுத்துவதில்லை என்றும், அனைவரும் தரையில் அமர்ந்து ஒன்றாக தொலைக்காட்சி பார்த்தபடியே சாப்பிடுவதை விரும்புவதாகவும் தெரிவித்தார். சமையலறைப் பகுதியில், அவரும் அவரது மகன்களும் இணைந்து சமையல் செய்வதாகக் குறிப்பிட்டார்.
மூத்த மகன் சமையலில் நிபுணர் என்றும், இதற்கான சான்றிதழ் கூட வைத்துள்ளதாகவும் பெருமையுடன் கூறினார். அவரது படுக்கையறையை மிகவும் நிம்மதியான இடம் என்று குறிப்பிட்ட மீனா, நீண்ட படப்பிடிப்பிற்குப் பிறகு அங்கு ஓய்வெடுப்பதே தனக்கு மிகவும் பிடித்தமான செயல் என்றும் தெரிவித்தார். தனது கண்ணாடியிலான பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் சேகரிப்புகளை அவர் மகிழ்ச்சியுடன் காண்பித்தார். படப்பிடிப்பில் தன் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஒப்பனை செய்து கொள்வது எப்படி என்பதை அவர் ஹோம் டூர் வீடியோவில் விவரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.