coimbotore | போதைப் பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற மத்திய அரசின் இலக்கிற்கு வலு சேர்க்கும் விதமாகவும், தியானம் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் வாழும் கலை அமைப்பினர் சார்பில் மார்ச் இரண்டாம் தேதி பிரம்மாண்ட தியான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணி முதல் மாபெரும் இசை, ஞானம் மற்றும் தியானம் நிகழ்ச்சி நடைபெறும் என கோயம்புத்தூர் குருதேவ் தியானங்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் புருஷோத்தமன் தெரிவித்தார்.
ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல ஆன்மீகத் தலைவரும், இலாப நோக்கற்ற, கல்வி மற்றும் மனிதாபிமான அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ.ஶ்ரீ.ரவிசங்கர் மார்ச் 2ஆம் தேதி கோவையில் மாபெரும் பொது தியான நிகழ்ச்சி மற்றும் பிரத்யேக பூஜையை நடத்துவதற்காக கோவை வருகிறார்.
இது குறித்து, கோயம்புத்தூர் குருதேவ் தியானங்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் புருஷோத்தமன் மற்றும் தி.ஆர்ட்.ஆஃப் லிவிங்கின் கோர் - கமிட்டி உறுப்பினர் சசி ரேகா செய்தியாளர் சந்திப்பில், 'கோவையில் போதைப்பொருள் இல்லா இந்தியா பிரச்சாரத்தை ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கர் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்வுகளை நடத்துவதன் நோக்கம், தியானத்தை மக்களிடையே கொண்டு சென்று மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்கும் தலையீடாக அறிமுகப்படுத்துவதும், போதைப்பொருள் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்” என்றார்.
முதல் நாள் (மார்ச் 2"ம் தேதி) கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணி முதல் மாபெரும் இசை, ஞானம் மற்றும் தியானம் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்வு அனைவருக்கும் திறந்திருக்கும் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள 30"க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பொதுமக்களுடன் கலந்துகொள்வார்கள். அனைத்து பங்கேற்பாளர்களும் ஸ்ரீ. ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் வழிநடத்தப்படும் தியான நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்” என்றார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“