பாம்பே-ல ஃபேமஸ் போட்டோகிராபர் எடுத்த புகைப்படம்… இதுதான் ஸ்பெஷல்; நடிகை கே.ஆர் விஜயா ஹோம் டூர்

பழம்பெரும் நடிகையான கே.ஆர். விஜயாவின் பிரத்தியேகமான ஹோம் டூர் குறித்த விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதில் தனது சினிமா பயணம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகையான கே.ஆர். விஜயாவின் பிரத்தியேகமான ஹோம் டூர் குறித்த விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதில் தனது சினிமா பயணம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
K.R. Vijaya

பாம்பே-ல ஃபேமஸ் போட்டோகிராபர் எடுத்த புகைப்படம்… இதுதான் ஸ்பெஷல்; நடிகை கே.ஆர் விஜயா ஹோம் டூர்

தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான கே.ஆர். விஜயா, தனது 60 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனக் கூறலாம். தனது திரையுலகப் பயணத்தின் தொடக்கம் குறித்து இந்தியாக்ளிட்ஸ் யூடியூப் சேனலுடனான நேர்காணலில் அவர் கூறியுள்ளார். இந்த நேர்காணல் ஒரு ஹோம் டூராக அமைந்தது என்பது கூடுதல் சிறப்பு.

Advertisment

தனது திரையுலக பயணத்தை கே.ஆர். விஜயா குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்க்கும் போது,  கே.ஆர். விஜயா ஒரு நடிகையாக வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை. இது அவரது பெற்றோரின் கனவாகவே இருந்தது. 11 வயது வரை கேரளாவில் வளர்ந்த தனக்கு, சினிமா பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. தந்தை ராணுவத்தில் இருந்தவர். மேலும், நாடகத் துறையில் ஆர்வம் கொண்டவர். நடிகர் நாகையாவுடன் அவருக்கு பழக்கம் இருந்ததாகவும், கே.ஆர். விஜயா நினைவு கூர்ந்தார். தனது வீட்டில் இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் குறித்து கே.ஆர். விஜயா பகிர்ந்து கொண்டார்.

இவற்றில், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து கே.ஆர். விஜயாவிற்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனை கே.ஆர். விஜயா, தனது வீட்டில் ஃப்ரேம் போட்டு அலங்கரித்துள்ளார். 'இதய கமலம்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தன்னுடைய 60 ஆண்டுகள் பழமையான புகைப்படத்தை இப்போதும் கே.ஆர். விஜயா பத்திரமாக வைத்துள்ளார். தீபாவளியன்று தனது 3 சகோதரிகளுடன் எடுத்த ஒரு படம், தோட்டத்தில் தனது பேரக்குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இதில் நிறைந்துள்ளன.

எனினும், இந்த வரிசையில் தனது கணவருடன் கே.ஆர். விஜயா இணைந்திருக்கும் புகைப்படம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று கூறுகிறார். ஏனெனில், புகழ்பெற்ற மும்பை புகைப்படக் கலைஞரால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறையில் எங்கு இருந்து பார்த்தாலும், இப்புகைப்படம் நம்மை பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற தோற்றம் அளிக்கும் என்று கே.ஆர். விஜயா தெரிவித்துள்ளார். தனது பேரக்குழந்தைகளுடன் தோட்டத்தில் விளையாடும்போது எடுத்த ஒரு புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றார். 

Advertisment
Advertisements

திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் (2009), "சூத்ரதாருலு" படத்திற்காக (1989) நந்தி சிறப்பு ஜூரி விருது, "இரு மலர்கள்" (1967) மற்றும் "நம்ம வீட்டு தெய்வம்" (1970) படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், "தீர்க்க சுமங்கலி" (1974) படத்திற்காக சிறப்பு விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது (2004), "இத்திரி பூவே சுவண்ணபூவே" (1984) படத்திற்காக சிறந்த 2-வது நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள், சலசித்ர ரத்னா விருது (2013) கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள், "சத்யம் சிவம் சுந்தரம்" (2018) படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஜன்மபூமி தொலைக்காட்சி விருதுகள், நாகிரெட்டி நினைவு விருதுகள் (2013), காங்கிரஸ் மகளிர் விருதுகள் (2017), நட்சத்திர சாதனையாளர் (2019), மற்றும் டி.எஸ். மேக்ஸ் கலாஸ்ரீ விருது (2018). பல்வேறு விருதுகளும் அவரது வீட்டை அலங்கரிக்கின்றன.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: