செஞ்சந்தன பொடி சேர்த்து இப்படி எண்ணெய் ரெடி பண்ணுங்க… முடி நீளமா, அடர்த்தியா வளரும்; டாக்டர் நித்யா

வீட்டில் கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் மற்றும் அவுரி போன்றவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் எண்ணெய், முடி வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு எளிய தீர்வாக அமையும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

வீட்டில் கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் மற்றும் அவுரி போன்றவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் எண்ணெய், முடி வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு எளிய தீர்வாக அமையும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Hair care in

செஞ்சந்தன பொடி சேர்த்து இப்படி எண்ணெய் ரெடி பண்ணுங்க… முடி நீளமா, அடர்த்தியா வளரும்; டாக்டர் நித்யா

முடி உதிர்வு என்பது இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் பொதுவான பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பருவமடைந்த இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை போன்ற பிரச்னைகள் கவலை அளிப்பதாக உள்ளன. இதற்கான தீர்வுகளைப் பற்றி சித்தா மருத்துவர் நித்யா தனது யூடியூப் வீடியோவில் எளிமையாக விளக்கியுள்ளார்.

முடி உதிர்வுக்கு முக்கியக் காரணங்கள்

Advertisment

முடி உதிர்வுக்கான முக்கியக் காரணங்களாக நமது தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் சூடு மற்றும் மலச்சிக்கல் ஆகியவை. அதிக உப்பு, காரம், புளிப்புச் சுவை கொண்ட உணவுகள், அத்துடன் ரசாயனங்கள் மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வாயு நிரப்பப்பட்ட பானங்கள் போன்றவை முடி உதிர்வை அதிகப்படுத்துகின்றன. உடல் சூடு அதிகரிப்பதும், சரியான நேரத்தில் மலம் கழிக்காததால் ஏற்படும் மலச்சிக்கலும் முடி உதிர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

முடி வளர்ச்சிக்கு சில எளிய தீர்வுகள்

டாக்டர் நித்யா, உணவு முறையில் மாற்றங்கள் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய வைத்தியங்கள் மூலம் இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முடியும் என்று கூறுகிறார். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த, முதலில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்துடன், மலச்சிக்கல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தவிர்க்க, மேலே குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

மலச்சிக்கல் மற்றும் ரத்தசோகை போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய, 'பவன கடுக்ஷை' என்ற சித்தா மாத்திரையைப் பயன்படுத்தலாம் என அவர் பரிந்துரைக்கிறார். வீட்டு வைத்தியம் (ஹேர் ஆயில்): வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சிறப்பான முடி தைலத்திற்கான செய்முறையையும் டாக்டர் நிதியா வழங்கியுள்ளார்.

Advertisment
Advertisements

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், சிறிதளவு செஞ்சந்தனம், கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய் விழுது, அவுரி இலைச் சாறு, தேங்காய்ப் பால் மற்றும் ஆட்டுப்பால் ஆகியவற்றைச் சேர்த்து இந்தக் கலவையைத் தயாரிக்கலாம். இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 முறை அல்லது தினசரி பயன்பாட்டிற்கோ பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து தடவி வந்தால், முடியின் வேர்கள் பலப்படும். இந்த எளிய ஆலோசனைகள், முடி உதிர்வுப் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வைத் தருவதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று மருத்துவர் நித்யா கூறியுள்ளார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: