திருப்பதி திருமலை ஸ்ரீ தும்புரு தீர்த்த முக்கொடி உற்சவம் மார்ச் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவை தொடர்ந்து, புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிலையில், மார்ச் 24ஆம் தேதி காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மறுதினம் மார்ச் 25ம் தேதி காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், பாபவினாசனம் அணையில் பக்தர்களுக்கு காலை உணவு மற்றும் அன்னதானம், குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, காவல்துறை மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன.
இதற்கிடையில், பௌணர்மி நன்நாளில் கருட பகவான் சர்வ அலங்கார ஸ்ரீமலையப்ப சுவாமி கருடன் மீது காட்சியளிப்பார்.
இதற்கிடையில், ஜூன்-2024 மாதத்திற்கான திருமலை மற்றும் திருப்பதிக்கான பொது ஸ்ரீவாரி சேவைக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் 27.03.2024 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
தொடர்ந்து, நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“