/tamil-ie/media/media_files/uploads/2023/08/Coimbatore-3.jpg)
கோவையில் கர்ப்பிணி பெண்களுக்கு அதிநவீன ஈனிலகம் தொடங்கப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்களுக்கு உதவும் வகையில் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பிரசவ மையத்துக்கான தனித்தளம் ஒன்று ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது, எஸ்.என்.ஆர். சன்ஸ் இயக்க அலுவலர் சுவாதி ரோகித் வழிகாட்டுதலின்படி ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று தொடங்கப்பட்டது.
இதில் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி தங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை தருவதைப் போல அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஈனிலகத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மகளிர் சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
மேலும், இதில் அதிநவீன கருவிகள், குளியல் தொட்டி சிறப்பு படுக்கை என பெண்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.