New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Viral.jpg)
தமிழ் சீரியல் பார்த்து வைரலான இளைஞர்
தமிழ் சீரியல் பார்த்து வைரலான இளைஞர்
தமிழ் சீரியல்களை 'கரைத்துக் குடித்த' கல்லூரி மாணவன் விக்னேஷ், இண்டியா க்ளிட்ஸ் தமிழ் என்ற வலையொளிக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் தனக்கு பிடித்தமான சீரியல் நாகினி என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், பல்வேறு சீரியல்கள் குறித்து நேயர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது பல்வேறு விஷயங்களை சீரியலில் உள்ளது போலவே பேசினார். இது பற்றி நெறியாளர் அவரிடம் கேட்டுக்கொண்டார். தற்போது, விக்னேஷ்க்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் பேசுகையில், “எனக்கு பல்வேறு சீரியலில் இருந்தும், வலையொளி சேனல்களில் இருந்தும் குறுஞ்செய்தி அனுப்பியிருப்பார்கள்” என்றார்.
தனக்கு நடிகர் சூர்யாவை பிடிக்கும் என்றும் சிங்கம் உள்ளிட்ட படங்கள் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் அவர் ஒரு கடின உழைப்பாளி என்றும் கூறினார்.
சிறிய வயதில் தாம் ஒரு கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பியதாகவும் அதற்கு அதிக பணம் வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறினார்.
விக்னேஷ்க்கு சமூக வலைதளத்தில் பலரும் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் தமக்கு எதிர்நீச்சல், சுந்தரி, கயல், இலக்கியா உள்ளிட்ட சீரியல்கள் பெவரேட் என்றும் அவர் கூறினார்.
Thanks to Indiaglitz Tamil
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.