ஆதார் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்ய வேன்டுமானால், தாலுக்கா ஆஃபீஸ் போக வேண்டும், அஞ்சல் அலுவலகம் போகவேண்டும், ஈ சேவை மையம் போக வேண்டும் என்று நேரமில்லை என சலித்துக்கொள்பவரா நீங்கள், உங்களுக்காகவே இந்த புதிய வசதி வந்திருக்கிறது. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே, ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை நீங்களே மாற்றம் செய்துகொள்ளலாம். இது ரொம்ப ஈஸியான வழி இந்த செய்தியை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவில் இன்றைக்கு அனைவரின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. எல்லாவற்றுக்கும் ஆதார் ஆதாரம் அவசியமாக உள்ளது. அதனால், அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அரசு நலத்திட்டங்கள் பெற, அரசு சார்ந்த அலுவல் செயல்களுக்கு ஆதார் அட்டை வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்தியாவில் ஆதார் இல்லாமல் எதுவும் ஆகாது என்ற நிலையில், அனைத்து தேவைகளுக்கும் ஆதார் முக்கியமானதாக உள்ளது. அதனால், ஆதார் அட்டையில் உள்ள உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை, நீங்கள் சமீபத்தில் முகவரி மாறியிருந்தால், அந்த முகவரியில் இருந்து ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக அளிக்க வேண்டுமானால், அதற்கு உங்கள் ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டும்.
ஆதார் அட்டையில் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். அந்த ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி, பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற உங்கள் அருகில் உள்ள தாலுக்கா அலுவலங்களிலும் தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம். அதே போல், ஆதாரில் உங்கள் முகவரியை மாற்ற வேண்டுமானால், ஆதாரில் தொலைபேசி எண் இணைக்கப்பட்டு இருந்தால், ஆதாரில் உள்ள முகவரியை நீங்களெ ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம்.
உங்களுடைய மொபைல் ஃபோனிலேயே உங்களுடைய ஆதாரில் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதாரை மாற்றலாம்.
உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், தொலைபேசி கட்டணம் பில், கேஸ் பில் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் தயாராக இருந்தால், ஆதாரில் மிக எளிதாக முகவரி மாற்றம் செய்யலாம். இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றால் உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம், உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.
அதற்கு https://ssup.uidai.gov.in என்ற இணையதளம் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
இதைத் தொடர்ந்து முகவரி மாற்றம் என்பதை செலக்ட் செய்து, புதிய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான மேற்சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதாரில் இந்த மாற்றம் செய்வதற்கு கட்டணமாக பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.
அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும். இதனை வைத்து முகவரி மாற்றம் குறித்த ஸ்டேட்டஸை பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான், இனி ரொம்ப ஈஸியாக நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆதாரில் முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“