Aadhaar card update: மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகத்தின் (Ministry of IT and Electronics) கீழ் இயங்கும் பொது சேவை மையங்கள் (Common Service Centre CSC) ஆதார் புதுபிப்பு (updation) வசதியை Banking Correspondents களாக செயல்படும் 20,000 மையங்களில் தொடங்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) அனுமதி வழங்கியுள்ளது.
முத்ரா திட்டப் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி - தகுதிகள், விபரங்கள் இதோ!
”குடிமக்களுக்கு ஆதார் புதுபிப்பை எளிமையாக்குவதற்காக, வங்கிகளால் நியமிக்கப்பட்ட banking correspondents களாக செயல்படும் பொது சேவை மையங்கள் ஆதார் புதுப்பிப்பு சேவைகளை வழங்கலாம் என UIDAI அனுமதித்துள்ளது. இதுபோன்ற சுமார் 20,000 பொது சேவை மையங்கள் இந்த சேவையை தற்போது குடிமக்களுக்கு வழங்கும்”, என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வங்கி வசதியுடன் கூடிய பொது சேவை மையங்கள் தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தேவையான பிற அனுமதிகளைப் பெற்ற பிறகு ஜூன் முதல் இப்பணிகளை ஆரம்பிக்கலாம் என UIDAI தெரிவித்துள்ளது.
To make Aadhaar updating easier for citizens, @UIDAI has permitted @CSCegov_ which are designated banking correspondents of banks, to offer #Aadhaar update services. Around 20,000 such CSCs will now be able to offer this service to citizens.
— Ravi Shankar Prasad (@rsprasad) April 27, 2020
முன்பு பொது சேவை மையங்கள் ஆதார் பதிவு செயல்முறையையும் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் தனியுரிமை (privacy) மற்றும் தரவு பாதுகாப்பு (data security) தொடர்பான விவாதங்களுக்கு பிறகு செப்டெம்பர் 2017 முதல் இந்த பணி நிறுத்தப்பட்டது.
பொது சேவை மையங்களை தவிர்த்து, வங்கி கிளைகள், தபால் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் செயல்படும் UIDAI வால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் (authorised centres) ஆகியவைகளை பொது மக்கள் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு அணுகலாம்.
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய, பான் (PAN) அட்டை எடுக்க மற்றும் பல்வேறு அரசு திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் தேவைப்படும் ஒரு ஆவணமாகும். ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை நீங்கள் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும், இதனால் அது ஒரு சரியான சான்றாக பயன்படும். ஆதார் அட்டையில் உள்ள உங்கள் முகவரியை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் offline மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.