Advertisment

சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினமும் 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
Sabarimala temple, kerala Government, Supreme Court,

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ் பெற்றது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்வர். குறிப்பாக விஷேச நாட்களில் அதிகப் படியான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில் சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசன் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களை சந்தித்து கூறினார். 

Advertisment

அவர் கூறியதாவது,  மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள். மேலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். 

இதற்காக பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் சத்ரம் ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை தரிசனத்திற்காக 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்தால் அந்த தரிசன காலி இடத்திற்கு ஏற்ப உடனடி முன்பதிவின் வேறு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 

நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

சன்னிதானம்-பம்பை இடையேயான ரோப் கார் இணைப்பு திட்ட பணிகளை நடப்பு சீசனிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment