Aadhar card news in tamil: இந்தியாவின் மிகப்பெரிய எல்பிஜி கேஸ் நிறுவனமான இண்டேன், அதனுடைய எல்பிஜி இணைப்புடன் உங்களுடைய ஆதார் அட்டையை இணைக்கவும், மத்திய அரசின் மானியத்தை பெறவும், சமீபத்திய விபரங்களை எளிய முறையில் பெறவும் ஈஸியான வழிகளை இங்கு வழங்குகிறோம்.
ஆதார் அட்டை இந்திய மக்களின் முக்கியமான அடையாள அட்டைகளுள் ஒன்றாக உள்ளது. அவை பல துறைகளில் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. அதோடு இந்த அடையாள அட்டையை உங்கள் கணக்குகளுடன் இணைக்கப்படும்போது அதிக நன்மைகள் கிடைக்கின்றன.
இந்திய அரசின் திட்டங்கள் நேரடியாக சென்று சேர்வதற்காக, ஆதார் எண்களை இணைப்பது அவசியம் ஆகும். அதன்படி எல்பிஜி வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை எண்ணை எரிவாயு நிறுவனத்துடன் இணைக்க வேண்டும். அரசு அளிக்கும் மானிய பரிமாற்றத்தை எளிய வழியில் பெறுவதற்காகவே இது போன்று வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக இண்டேன் கேஸ் நிறுவனம் தொலைபேசி அழைப்புகள் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் அதன் வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது,
உங்கள் ஆதார் எண்ணை இண்டேன் கேஸ் ஏஜென்சியுடன் எவ்வாறு இணைக்க முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.
மொபைல் எண் பதிவு செய்தல்:
உங்கள் மொபைல் எண் இண்டேன் எரிவாயு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய முயற்சி செய்யலாம். அதற்கு உங்கள் செய்தி பெட்டிக்குச் சென்று, புதிய செய்தியில் எரிவாயு ஏஜென்சியின் தொலைபேசி எண்ணின் IOC <STD குறியீட்டைத் தட்டச்சு செய்து வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
எரிவாயு ஏஜென்சியின் எண் உங்களுக்குத் தெரியாவிட்டால், அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ‘https://cx.indianoil.in’ ஐப் பார்வையிடலாம். உங்கள் எண் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்தால், உங்கள் ஆதார் அட்டை இணைக்க ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.
மெசேஜ் மூலம் இணைக்க:
உங்களுடைய ஆதார் எண் பதிவுசெய்யப்பட்டதும், ஆதார் அட்டை மற்றும் இண்டேன் கேஸ் இணைப்பை இணைக்க ஒரு செய்தியை அனுப்ப வேண்டும். இதற்காக, நீங்கள் ஒரு புதிய செய்தியில் யுஐடி <ஆதார் எண்> என தட்டச்சு செய்து அதே எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதாவது நீங்கள் பதிவு செய்துள்ள எரிவாயு ஏஜென்சி எண்னுக்கு அனுப்ப வேண்டும். இதைச் செய்த பிறகு, உங்கள் எரிவாயு இணைப்பு, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். மேலும் உங்கள் மொபைல் எண்ணிற்கு கேஸ் இணைக்கப்பட்டதற்கான செய்தியும் கிடைக்கும்.
தொலைபேசி அழைப்பு வழியாக இணைக்க:
உங்களுடைய தொலைபேசி அழைப்பு மூலமாகவும் எரிவாயு இணைப்பை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கலாம். அதற்காக, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 2333 5555 என்ற எண்ணை அழைக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை வாடிக்கையாளர் பராமரிப்பு ஊழியரிடம் சொல்ல வேண்டும். பின்னர் அது உங்கள் எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும்.
Aadhar card news in tamil: how to Link LPG connection with Aadhar card
மூலம் பதிவு செய்ய:
உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் இண்டேன் கேஸ் உடன் இணைக்கலாம். முதலில், நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு, உங்கள் முகவரி இருப்பிடத்தை நிரப்பி, நன்மை வகைகள் திட்டம், விநியோகஸ்தரின் பெயர் மற்றும் இண்டேன் கேஸ் ஐடி போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும். உங்கள் தொடர்பு விவரங்களை வைத்த பிறகு, சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் ஒரு கடவு சொல்லை (OTP) ஐப் பெறுவீர்கள். அதை நிரப்பி, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஐவிஆர்எஸ் (IVRS) முறை வழியாக பதிவு செய்ய:
ஐவிஆர்எஸ் (ஊடாடும் குரல் மறுமொழி அமைப்பு) மூலம் தொடர்பு விவரங்களை அறிய இண்டேன் வாயுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். அதன் பின் ஐவிஆர்எஸ் எண்ணை அழைக்கவும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் எரிவாயு இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil“